தற்போதைய செய்திகள்

கரூர் சாலை பணியில் ரூ.3 கோடி முறைகேடு-முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

கரூர்

கரூரில் நடைபெற்று வரும் சாலை பணியில் ரூ.3 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் ஈசநத்தம், கூம்பூர், வீரியபட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிகளில் ரூ.3 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கரூர் மாவட்ட நெடுஞ்சாலைத் துறையில் ரூ.170 கோடிக்கு ஒப்பந்தம் நடைபெற்றது. தி.மு.க. காண்டிராக்டர் ரோடு போடாமல் சுமார் 3 கோடி அரசு பணத்தை முறைகேடு செய்துள்ளார்.

தி.மு.க. ஆட்சியில் தில்லுமுல்லு நடக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறையில் கிரஷர், சவுடு மண் என தி.மு.க.வினர் கூறு போட்டு விற்று வருகின்றனர். ரூ.140 கோடி வேலையை ஒருவர் மட்டுமே ஒப்பந்தம் எடுத்தள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.