கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை ஊராட்சியில் நாயுடு தெரு, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி பகுதிக்குட்பட்ட கடைவீதி மற்றும் தளி ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சு.பிரபாகர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ராயக்கோட்டையில் கடை வீதீ மற்றும் நாயுடு தெருவில் மருத்துவ துறை, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகள், தூய்மை பணிகள் மற்றும் வீடு வீடாக காய்ச்சல் கணக்கெடுக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ராயக்கோட்டையில் முற்றிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும். அதேப்போல தினந்தோறும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். இக்கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் காய்ச்சல் மற்றும் சளி உள்ளதாக என்பதை மருத்துவ சுகாதாரா ஆய்வாளர்கள் செவிலியர்கள் கணகெடுப்பு பணிகள் செய்ய வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த கையொட்டிகளை வழங்கி தங்கள் வீடுகளில் காய்ச்சல் மற்றும் சளி அறிகுறி இருந்தால் உடனடியாக சுகாதார பணியாளர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து தேன்கனிக்கோட்டை கடை வீதி பகுதியில் ஏற்கனவே தடைசெய்யப்பட்ட பகுதியை பார்வையிட்டு இப்பகுதி மக்களுக்கு சிறு பாக்கெட்டுகள்; கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் பவுடர்களை அனைத்து வீடுகளுக்கு வழங்கி அவற்றின் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பேரூராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து தளி ஒன்றியத்திற்கு உட்பட்ட தளிகொத்தனூர் ஊராட்சி நல்லசந்திரம் கிராமத்தில் மாநில நிதிகுழு 2019-2020 – மூலமாக ரூ. 18.5 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் தடுப்பு சுவர் மற்றும் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 2. 67 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் உயர் மட்ட பாலம் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டார். மேலும் நல்லசந்திரம் கிராமத்தில் ரூ. 3.95 லட்சம் மதிப்பீட்டில் ஏரி புரனமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதை நேரில் பார்வையிட்டு கிராம மக்களுக்கு கொரோன வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இவ்வாய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலாதா, சுபாராணி, சென்னகிருஷ்ணன், தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் ராமசந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சேகர் மற்றும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.