தற்போதைய செய்திகள்

வாடகைதாரர்களின் அறிக்கையை வெளியிட்டால் மக்களால் ஒதுக்கப்படுவீர்கள் – ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

சென்னை

பாரத் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்றும், விரைவில் டெண்டர் விடப்படும் என்றும் வாடகைதாரர்களால் கொடுக்கின்ற அறிக்கையை நீங்கள் வெளியிட்டால் மக்களால் நீங்கள் ஒதுக்கப்படுவீர்கள், தனிமைப்படுத்தப்படுவீர்கள் என்று ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்

இதுகுறித்து சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்  கூறியதாவது:-

பாரத்நெட் டெண்டர் திட்டம் என்பது ஏறத்தாழ தமிழ்நாட்டில் உள்ள 12,544 கிராம ஊராட்சிகளை கண்ணாடி இழை மூலம் இணைக்கும் திட்டமாகும். இந்தத் திட்டம் நிறைவேறினால் scv போன்ற கேபிள் டிவி நிறுவனங்களின் எதிர்காலமெல்லாம் கேள்விக்குறியாகி விடும். கிராம அளவில் இந்த இன்டர்நெட் வசதி செய்யப்பட்டால் குறைந்த விலையில் அனைத்து கேபிள் டிவி, இன்டர்நெட் வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் விவசாயத் துறை சார்ந்த செய்திகள், வேளாண்மைத் துறையோடு, கல்வித் துறை, மருத்துவத் துறை மற்றும் அனைத்து வசதிகளும் கிராமங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும்.

ஆகவே, இந்த இன்டர்நெட் வசதியோடு, கேபிள் டிவி வசதியும் கிடைக்கின்றபொழுது, இதில் முதலீடு செய்திருப்பவர்கள் இதை ஆரம்ப நிலையிலே முடக்குவதற்காக இதுவரை 100 முறை இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். நீதிமன்றத்திற்கும் அவர்கள் எடுத்துச் சென்றார்கள். நீதிமன்றத்தில், இது ஊழல் என்று வழக்கு தொடுத்து குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டது.

ஒப்பந்தப்புள்ளியே விடப்படாத, ஒதுக்கப்படாத இந்தத் திட்டத்தில் எப்படி முகாந்திரமில்லாமல் குற்றம் சாட்டுகின்றீர்கள் என்று கேட்ட கேள்விக்கு மூக்கறுபட்டு நீதிமன்றத்திலிருந்து வழக்கை வாபஸ் பெற்றார். இந்தத் திட்டத்திற்காக டிசம்பர் 5, 2019 அன்று வலைதளம் மூலமாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஒப்பந்தப்புள்ளி முடிப்பதற்கான அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப் பட்ட நிலையில், மத்திய அரசின் கீழ் இயங்கும் இரண்டு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சென்னையிலுள்ள அறப்போர் இயக்கம் ஆகியவை தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் கோரிய ஒப்பந்தப்புள்ளியை இந்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் வழிகாட்டுதல்படி, இந்திய உற்பத்தி நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்குதல், அதாவது, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை வழங்குதல், make in india விதிமுறைகளின் கீழ் முழுவதுமாகக் கடைபிடிக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

மேலும், தொடர்ந்து மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உள்நாட்டு உற்பத்தி மற்றும் வர்த்தகத் துறை இதை விசாரணை செய்து கூடுதல் செயலர் தலைமையில் 23.6.2020 அன்று நிலைக்குழு கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் துறை அலுவலர்கள் பங்கேற்று இந்த ஒப்பந்தப்புள்ளியிலே மத்திய அரசின் வழிகாட்டுதல்படி இந்திய உற்பத்தி நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்குவது முழுவதுமாக கடைபிடிக்கப்பட்டுள்ளது என தெளிவுபடுத்தப்பட்டது.

உள்நாட்டு உற்பத்தி மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் செயலர் இது குறித்து நமக்கு ஒரு அறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள். இதைத்தான் அறப்போர் இயக்கமும் மற்றும் எதிர்க்கட்சியினரும், இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது என்று ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

இந்த உத்தரவிலே, இது re- tender and Re-invites the bids, இந்த விதிமுறைகளில் Make in india , 2017 விதிமுறைகளை முழுமையாக உள்ளடக்கி இந்த ஒப்பந்தப்புள்ளி மறு அழைப்பு கொடுக்க வேண்டும். மறு அழைப்பு, மறு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டுமென்றால், ஏற்கனவே கொடுத்தது ரத்து செய்யப்பட வேண்டும்.

அதில் ஒன்றும் மாற்றம் இல்லை. ஆனால், ஏதோ, திட்டமே ரத்து செய்யப்பட்டது போன்ற ஒரு மாயத் தோற்றத்தையும், இந்தத் திட்டத்தில் இன்றைக்கு ஊழல் நடைபெற்றிருக்கிறது என்றும், விதிமுறைகளை இன்றைக்கு இருக்கக்கூடிய, உலகளாவிய global players, அதில் குறிப்பிட்ட சில நாடுகள் இதிலே பங்கேற்கக் கூடாது என்பது இன்றைக்கு வெளிப்படையாக உள்ள விஷயம். ஆகவே, இந்தத் திட்டத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களே, இதிலே முழுமையாக பங்கேற்கின்ற வகையில் விதிமுறைகள் இருக்க வேண்டும் என்று தெளிவாக இதிலே சொல்லப்பட்டிருக்கிறது.

அதற்கடுத்து, தற்பொழுது Department of Telecommunication, Re-tender-க்கான உத்தரவை நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். Department of Telecommunication, Re-tender- தான் நமக்கு Funding Agency.. இப்பொழுது திருத்திய நிபந்தனைகளுடன் மறு டெண்டர் கோரலாம் என கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எங்கே திட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது, இதில் எங்கே ஊழல் என்று சொல்லப் பட்டிருக்கிறது? இன்னும் யாரிடத்திலும் ஒப்பந்தப்புள்ளி ஒப்படைக்கப்படவில்லை. நிபந்தனைகள் தகுதியுள்ளவர்கள், திறமையானவர்கள், அனுபவம் உள்ளவர்கள் பங்கேற்கின்ற வகையில் தானேயொழிய, முதலமைச்சரும், அமைச்சரும் தனிப்பட்ட முறையில் உருவாக்குகிற விதிமுறைகள் அல்ல,Board of Directors, அதிலே, அனைத்துத் துறை செயலாளர்கள், உயரதிகாரிகள் இருக்கிறார்கள்.

இந்த அரசின் வழிகாட்டுதலின்படி, Board of Directors,தான் விதிமுறைகளை முடிவு செய்கிறார்கள். எந்தவிதத்தில் ஊழல் என்பதற்கான ஆதாரத்தை அவர் சொல்லவில்லை, ஆனால், அபாண்டமான பழியை சுமத்துகிறார், மிகக் கேவலமான வழிகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுவது, தொடர்ந்து விமர்சனம் செய்வது, பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்களை முடக்கிப் போடுவதற்கு எந்தெந்த வழிகளையெல்லாம் கையாள வேண்டுமோ, அதையெல்லாம் கையாள்கின்றார்.

அவருடைய நோக்கம் நிச்சயமாக நிறைவேறாது. அவர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்கமாட்டார்கள்.  இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டால் மக்களின் வெறுப்புக்குத்தான் உள்ளாவார்கள். புரட்சித்தலைவர் காலத்திலே, வாங்காத கப்பலுக்கு கப்பல் ஊழல் என்று தமிழகம் முழுவதும் பேச வைத்தவர்கள் திமுக-வினர். ஐந்து முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை. அதனால் தான் அம்மாவின் அரசு தொடர்ந்து தமிழகத்தில் மக்களுக்கு சேவைகளை செய்து வருகிறது.

இதுபோல், வாடகைதாரர்களால் கொடுக்கின்ற அறிக்கையை நீங்கள் வெளியிட்டால் மக்களால் நீங்கள் ஒதுக்கப்படுவீர்கள், தனிமைப்படுத்தப்படுவீர்கள். உயிர் பயத்தில் இருக்கின்ற மக்களுக்கு உங்கள் அறிக்கையில் எந்த ஆறுதல் வார்த்தையும் இல்லை, அச்சம்தான் ஏற்படுகிறது. உங்கள் அறிக்கையை ஏற்று செயல்பட்டால் நாங்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கையால் மக்கள் எந்தப் பயனும் அடையவில்லை. அவர்தான் மக்களின் வெறுப்பைப் பெற்றுள்ளார். பாரத் நெட் திட்டத்தில் மிக விரைவாக டெண்டர் விடப்பட்டு 2021 பிப்ரவரிக்குள் பணிகள் முடிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.