சிறப்பு செய்திகள்

ஆன்-லைன் சூதாட்ட தடை மசோதா: பேரவையில் துணை முதல்வர் தாக்கல்

சென்னை

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வகை செய்யும் பேரவையில் இதற்கான சட்ட முன்வடிவை பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.தமிழக சட்டமன்றம் நேற்று மூன்றாவது நாளாக கூடியது. கேள்விநேரம் முடிந்ததும் ஆன்லைன் சூதாட்டம் குறித்த திருத்த சட்ட மசோதாவை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 1888-ம் ஆண்டு சென்னை மாநகர காவல் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 111\\\\1888) அதனுடன் இணைந்த தமிழ்நாடு . சட்டம் 32 |1987 மற்றும் தமிழ்நாடு சட்டம் 51| 1997 இன் மூலம் சென்னை மதுரை கோயம்புத்துார், சேலம் திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் 1930 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்ட சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம்III 1930) மூலம் மாநிலத்தின் பிறபகுதிகளிலும் ஆட்டச்சீட்டுகள்,

பகடைக்காய்கள் முதலியவற்றால் பணயம் வைத்தல் அல்லது பந்தயம் கட்டுதலின் முறையிலான சூதாடுதல் தடை செய்யப்பட்டுள்ளது, பணத்திற்காக அல்லது பணய பொருட்களுக்காக அடிமையாகும் தன்மை கொண்ட ரம்மி, போக்கர், முதலியன போன்றவைகளை கணினிகள் அல்லது கைப்பேசிகளை பயன்படுத்தி சூதாட்டம் ஆறுதல் சமீப காலங்களில் பன்மடங்கு பெருகியுள்ளது, இதன் விளைவாக அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுகின்றனர், மற்று் தற்கொலை சம்பவங்களும் பதிவாகின்றன,

இதன் பொருட்டு அத்தகைய தற்கொலை சம்பவங்களை தடுப்பதற்கும் இணையவழி சூதாட்டத்தின் தீமைகளில் இருந்து அப்பாவிமக்களை பாதுகாப்பதற்கும் தொடர்புடைய சட்டங்களை தக்கவாறு திருத்துவதன் மூலம் இணையவெளியில் பந்தயம் கட்டுதல் அல்லது பணயம் வைத்தலை தடை செய்வதற்கு முடிவு செய்துள்ளது,

எனவே 1930-ம் ஆண்டும் தமிழ்நாடு சூதாட்ட சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் III|1930) பொருந்துகையில் மாநிலம் முழுவதும் நீட்டிப்பதற்கு திருத்தம் செய்வதெனவும் 1888-ம் ஆண்டு சென்னை மாநகர காவல் சட்டம், (தமிழ்நாடு சட்டம்III1888) மற்றும் 1859 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டத்திற்கு (மையச்சட்டம்)xx!V|1859) அடுத்தடுத்து திருத்தங்களை செய்யவும் அரசானது முடிவு செய்துள்ளது

அப்போது சட்டமன்றப்பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறாமல் இருந்த காரணத்தால் அரசின் மேற்சொன்ன முடிவுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக அவசர சட்டம் ஒன்றை பிறப்பிப்பது தேவையானதாயிற்று, அதற்கிணங்கய வகையில் 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் சட்டங்கள் (திருத்த) அவசர சட்டமானது (தமிழ்நாடு அவசர சட்டம்11|2020) , 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ம்தேதியன்று ஆளுநரால் பிரகடனப்படுத்தப்பட்டு.

அது 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ம்நாளீிட்ட தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில் வெளியிடப்பட்டுள்ளது மேற்கண்ட சட்டத்தை மீறி கணினிகள் கணினி அமைப்பு கணினி வலையமைப்பு கணினிவளம் தொடர்பு சாதனம் எதுவும் அல்லது சூதாடுதலுக்கான பிற கருவி எதையும் பயன்படுத்தி ரம்மி, போக்கர் அல்லது பிற சூதாட்டம் எதையும் விளையாடுவதன் மூலம் பணயம் வைத்தலோ பந்தயம் கட்டுதலோ கூடாது அத்தகைய ஏற்பாடுகளும் செய்யப்பட கூடாது,

இணைய வெளியில் விளையாடுதல் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்தல் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் மேலும் பத்தாயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர். இவ்வாறு அந்த சட்டமசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.