திருநெல்வேலி

ராதாபுரம் தொகுதியில் 4509 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணம் – இன்பதுரை எம்எல்ஏ வழங்கினார்

திருநெல்வேலி

ஊரடங்கு உத்தரவு காரணமாக மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரண நிதியாக தலா ரூ.1000 வழங்க முதல்மைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட திசையன்விளையில் நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 கொரோனா நிவாரண நிதி வழங்கினார். இதேபோல் ராதாபுரத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் செல்வம் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூபாய் 1000 கொரோனா நிவாரண நிதி வழங்கினார்.

அதைத்தொடர்ந்து இன்பதுரை எம்.எல்.ஏ,இ செய்தியாளர்களிடம் கூறுகையில் ராதாபுரம் தொகுதியில் 4509 மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது நிவாரண தொகை வழங்கப்படுகிறது. மாற்றுதிறனாளிகளில் யார் பெயராவது விடுபட்டிருந்தால் அவர்கள் உரிய அடையாள அட்டையுடன் கூடிய ஆவணங்களுடன் வட்டாட்சியர்களிடம் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். எனவே இதனை ராதாபுரம் தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு நிவாரண நிதியை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் ராதாபுரம் ஒன்றிய கழக செயலாளர் அந்தோணி அமலராஜா, அம்மா பேரவை ஜெயக்குமார், அரசு வழக்கறிஞர் பழனி சங்கர் முன்னாள் கவுன்சிலர்கள் துரைசாமி, சுரேஷ், திசையன்விளை முத்து, யேசுமரியான், கபாலி, உவரி ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.