சிறப்பு செய்திகள்

இயேசுவின் போதனைகளை பின்பற்றிட உறுதி ஏற்போம்-கிறிஸ்தவ மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்து

சென்னை,

கிறிஸ்தவ மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ள கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இயேசு பிரானின் போதனைகளை பின்பற்றிட உறுதி ஏற்போம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தேவகுமாரனாம் இயேசு பிரான் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நாளில் மனித நேயம், அன்பு, சகோதரத்துவம், பிறருக்கு துன்பம் இழைத்திடாமை, பிறரது துன்பங்களை களைதல் போன்ற இயேசு பிரானின் உயரிய போதனைகளை பின்பற்றிட நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.