கொரோனா வைரஸ்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு
சென்னை
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசு இது தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துவருகிறது.
தொடக்கக் கல்வித்துறை
இதன் ஒரு பகுதியாக கரோனா வைரஸ் தாக்குதலின் முன்னெச்சரிக்கை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் பழனிச்சாமி, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சுகாதாரத் துறை அறிவுறுத்தலின் அடிப்படையில் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மாணவர்கள் தங்களது கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல், இருமல் வரும்போது கைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.