தற்போதைய செய்திகள்

அம்மாவின் புனித அரசு தொடர்ந்திட தன்னலம் கருதாது உழைத்திடுவோம் – கழக மகளிர் அணி வீரசபதம்

சென்னை, பிப்.11-

அம்மாவின் புனித அரசு தொடர்ந்திட தன்னலம் கருதாது உழைத்திடுவோம் என்று கழக மகளிர் அணியினர் வீரசபதம் மேற்கொண்டனர்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும்,
நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெறுவது குறித்தும் கழக மகளிர் அணி மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கழக வழிகாட்டுக் குழு உறுப்பினரும், கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தி தொடர்பாளருமான ஜே.சி.டி.பிரபாகர், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் என்.ஆர். சிவபதி ஆகியோர் கருத்துரையாற்றினர். முடிவில் வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் டி.வேளாங்கண்ணி (எ) கஸ்தூரி நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழ்நாடு மக்களின் உள்ளங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய அரசியல் வானில், சுடர்மிகு நட்சத்திரமாய் நம்பிக்கை பேரொளியாய் ஒளி வீசிய பெண் இனத்திற்காக உலகே வியக்கும் வண்ணம் பெண் இனத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை தந்த பெண் இனத்தின் பெருமை, சிங்க நிகர் தலைவி, தங்கத்தாரகை, புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களின் 73-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கிளைக் கழக, ஒன்றிய கழக, பேரூர் கழக, நகர கழக, உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவோம்.

பார்போற்றும் வகையில் நாடெங்கும் ஏழை. எளியோருக்கும், தாய்மார்களுக்கும், மாணவர்களுக்கும், இளைய சமுதாயத்திற்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், அனைத்து பிரிவினருக்கும், பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழர் குலசாமி அம்மாவின் தியாகத்தை, உழைப்பை, தொண்டுள்ளத்தை, அழியாப்புகழை, அகிலமெங்கும் எடுத்து சென்று அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடுவோம் என்று கழக மகளிர் அணி தீர்மானிக்கிறது.

உலக பெண் இனத்தின் காவல் அரணாக வாழ்ந்து நம்மை எல்லாம் வழி நடத்திய நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தெய்வீக நல்லாசியுடன் கழகத்தையும் கழக நல்அரசையும் கட்டிக்காத்து உலகை அச்சுறுத்திய கொரோனா என்னும் கொடிய நோயை தமிழகத்தில் எதிர்த்து போராடி கொரோனா பெருந்தொற்றில் தமிழக மக்களை பேணி பாதுகாத்த இயக்கத்தின் இருபெரும் தலைவர்களான கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய இருவரையும் வணங்கி பாராட்டி கழக மகளிர் அணி நன்றியினை தெரிவித்து கொள்கிறது.

ஏழை எளிய மாணவர்கள் மீது அக்கறை கொண்ட இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக மாணவர்களுக்கு 16 வகையான கல்வி திட்டங்களை தந்தார். வரலாறு காணாத வகையில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், 7 சட்டக்கல்லூரிகள், 40 கலைமற்றும் அறிவியல் கல்லூரிகள், 249 தொடக்கப்பள்ளிகள் தந்து அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் நடப்பாண்டில் 313 அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் மருத்துவ இடங்கள், 92 மாணவர்களுக்கு பல் மருத்துவ இடங்கள் கிடைப்பதிலும்,

கல்லூரிக்கட்டணம் மற்றும் தங்கும் விடுதி கட்டணத்தை மாநில அரசே ஏற்கும் வண்ணம் சுழல் நிதி ஏற்படுத்திய வரலாற்று சிறப்புமிக்க இந்தியாவின் தலை சிறந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை மனதார பாராட்டி வணங்கி வாழ்த்தி கழக மகளிர் அணி நன்றியினை தெரிவித்து கொள்கிறது.

“எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற உயர்ந்த லட்சியத்தோடு அமைதி, வளம், வளர்ச்சி என்ற அம்மா அவர்களின் மகத்தான இலக்கை நோக்கி நிர்வாக வசதிக்காக புதிய 6 மாவட்டங்களை உருவாக்கி, மகளிர் மேம்பாட்டிற்காக சுய உதவிகுழுக்கள் மூலம் 26 லட்சம் மகளிருக்கு ரூ.80,000 கோடிக்கு மேல் கடனுதவி வழங்கி மக்கள் மேம்பாட்டிற்காக 2000 முதலமைச்சர் அம்மா மினி கிளினிக்குகள் அமைத்து மிகச் சிறப்பாக கொரோனா என்னும் பேரிடர் காலத்தில் தமிழக மாணவர்களின் கல்வி திறன் பாதித்ததை மீட்டெடுக்கும் வகையில் 9.69 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா 2 ஜிபி டேட்டா கார்டு வழங்கி தனது அயராது உழைப்பால், மதி நுட்பத்தால், தன்னிகரற்ற ஆற்றலால்,

தலை சிறந்த நிர்வாகத்தால் தாய் தமிழ்நாட்டிற்கு அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாக விளங்குகின்ற கருணையின் வடிவம், எளியவர் தூயவர், தாயுள்ளம் கொண்டவர், தலைமை பண்பு மிக்கவர், முதலமைச்சர் எடப்பாடியாருக்கும் இந்த சாதனைகள் அனைத்திற்கும், துணையாக இருந்து வழி நடத்தி சரித்திர சாதனை படைத்து வருகின்ற,

அமைதியின் திருவுருவம், ஆற்றலின் வடிவம், எளிமையின் இமயம், பாண்டிய நாட்டு பண்பாளர், கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கழக மகளிர் அணி நன்றி சொல்லி வாழ்த்தி வணங்குகிறது.

தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாளில் உழவர் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க வாரி கொடுத்த பாரி வள்ளல் எம்.ஜி.ஆர்., தங்கத்தாரகை அம்மா அவர்களின் வழியில் தமிழகத்தில் 2 கோடி 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு முழு கரும்பு, அச்சுவெல்லம், ஏலக்காய், முந்திரி, பச்சரிசி உடன் ரூபாய் 2500 அள்ளிக் கொடுத்த அம்மாவின் அரசின் காவலர்கள் விவசாயின் மகன் அம்மாவின் உண்மை தொண்டன் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீட்டநாயகர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை வணங்கி நன்றியை கழக மகளிர் அணி தெரிவித்து கொள்கிறது.

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி என்று பாடிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு கருவுக்கும் திருவுக்கும் திட்டம் தந்ததாய் கருணையின் திருவுருவம் அம்மா வழியில் காவேரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்து அத்திக்கடவு அவினாசி திட்டத்தை செயல்படுத்தி நீர் மேலாண்மை பட்டியலில் முதலிடம் பிடித்து உணவு தானிய உற்பத்தியில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக இந்திய அளவில் முதலிடத்திற்கான கிருஷி கர்மா விருது பெற்று,

தமிழகத்தின் வேளாண் பெருமக்களை பாதுகாக்க 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தொகை 12,110 கோடிபயிர் கடனை தள்ளுபடி செய்து,“இது மக்களுக்கான அரசு”அம்மாவின் அரசு என நிருபித்த விவசாயிகளின் விடிவெள்ளி தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, கழகத்தின் தேனீ செங்கரும்பு கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கழக மகளிர் அணி வாழ்த்தி வணங்குகிறது.

மக்களை நேசித்து, மக்களுக்கான இயக்கம் கண்ட மன்னாதி மன்னன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தனக்கென வாழாமல் தன்னலம் கருதாமல் தமிழர் வாழ்வுக்காக தவவாழ்வு வாழ்ந்த நம் தாய் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு சீர்மிகு தலைநகர் சிங்கார சென்னையில் உலகை வியக்கும் வகையில் நினைவு மணி மண்டபமும், நினைவு இல்லமும் அமைத்து உலக தமிழர்கள் தங்கதாரகை அம்மா அவர்களை வணங்க வழிவகை செய்த கழக அரசுக்கும் கழகத்திற்கும் காவலர்களாக விளங்கும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களை பாராட்டி வணங்கி கழக மகளிர் அணி நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

இந்தியாவின் இரும்பு பெண்மணி எதிரிகளின் சிம்மசொப்பனம் நம் இயக்கத்தை இந்தியாவின் மூன்றாவது பேரியக்கமாக வளர்த்த ஒன்றரை கோடி தொண்டர்களின் காவல் தெய்வம் காலம் தந்த கருணை பெட்டகம் உலக பெண் இனத்தின் காவல் அரண் நம் தாய் புரட்சித்தலைவி அம்மா தீர்க்க தரிசன கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் நம் கழக அரசை எதிர் வருகிற 2021 தமிழக சட்ட சபை தேர்தலில் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தேர்தல் பணியினை முன்னெடுத்து அயராது உழைத்து தலைசிறந்த தலைமை பண்பும் எப்போதும் புன்னகை பூத்திட்ட திருமுகமும் தொலைநோக்கு பார்வையும் கருணை உள்ளமும் கொண்ட முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையில் அம்மா அரசை மீண்டும் அமைத்து தாய் தமிழ் நாட்டில் அம்மாவின் புனித அரசு தொடர்ந்திட இரவுபகல் பாராது பசி தூக்கம் அரியாது தன்னலம் கருதாது உழைப்போம் என்ற உறுதியோடு கழக மகளிர் அணி வீர சபதம் ஏற்கிறது.

சத்துணவு தந்த சரித்திர தலைவன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் தீயசக்தி என அடையாளம் காட்டப்பட்ட திருடர் கூட்டத்தின் தலைவன் தமிழினத்தின் துரோகி தமிழக துச்சாதனன் கருணாநிதியின் அரசியல் வாரிசு பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய் சொல்லும் பேர்வழி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் பெண் இனத்தை மதிக்காமல் இழிவாக பேசி வரும் தி.மு.க இளைஞர் அணி செயலாளர் சைக்கோ,

பெண் இனத்தின் விரோதி நயவஞ்சகன் உதயநிதி ஸ்டாலினை கழக மகளிர் அணி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. நாவடக்க தவறினால் இனி வரும் காலங்களில் கழக மகளிர் அணி அவரின் இல்லத்தை முற்றுகையிட்டு தக்க பாடம் புகட்டுவோம் என உதயநிதி ஸ்டாலினை எங்களது கழக மகளிர் அணி வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.