சிறப்பு செய்திகள்

தன்னலம் கருதாது பணியாற்றிய மருத்துவர்களின் பங்கு அளப்பரியது – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சென்னை

கொரோனாவுக்கு எதிரான அறப்போராட்டத்தில் தன்னலம் கருதாது பணியாற்றிய மருத்துவர்களின் பங்கு அளப்பரியது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மருத்துவர் தினத்தையொட்டி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

உயிர் காக்கும் உன்னத பணியான மருத்துவ பணியை மனமுவந்து மேற்கொண்டு வரும் மருத்துவர்களை சிறப்பிக்கும் தேசிய மருத்துவர்கள் தினமான இந்நன்னாளில் அனைத்து மருத்துவர்களுக்கும் எனது மருத்துவர் தின நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனாவிற்கு எதிரான அறப்போராட்டத்தில் மருத்துவர்களின் பங்கு அளப்பரியது. கொரோனா சூழலிலும் தன்னலம் கருதாது இரவு, பகல் பாராமல் அர்ப்பணிப்போடு பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறையை சேர்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.