தற்போதைய செய்திகள்

மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடர்வது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுப்பார் – அமைச்சர் க.பாண்டியராஜன் பேட்டி

சென்னை

தமிழக அரசு முழுவீச்சில் செயல்படுத்தி வரும் கொரோனா தடுப்பு பணிகளை தவறானன கண்ணோட்டத்துடன் மக்களை திசை திருப்ப முயற்சிக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர்வது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுப்பார் என அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட கொடுங்கையூர் முத்தமிழ் நகர் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பு மருத்துவ பரிசோதனை முகாமை அமைச்சர் க.பாண்டியராஜன், வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இதனைத்தொடந்து 35-வது வட்டம் கிருஷ்ணமூர்த்தி சாலை, 37 வது வட்டம் எம்.கே.பி.நகர் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்கள் பாதுகாப்புடன் விரைந்து பரிசோதனை மேற்கொள்ளும் வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கியதுடன் கொரோனா தொற்றை தடுக்க அரசின் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் முன்னிலையில் அனைவரும் உறுதி மொழி ஏற்றனர்.

அப்போது அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இன்று தண்டையார்பேட்டை மண்டலத்தில் நோய் தொற்றுக்கான அடையாள கூறு நாளுக்கு நாள் அதிகரித்தாலும் விரைந்து குணப்படுத்தக்கூடிய வகையில் ஆங்கில மருத்துவ சிகிச்சையுடன் சித்த மருத்துவ சிகிச்சைகளையும் கையாள்வதால் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் மண்டலமாக தற்போது தண்டையார்பேட்டை மாறி வருகிறது.
நோய் தொற்று 5 அல்லது 10 சதவீதம் உள்ள நோயாளிகளுக்கான சிகிச்சை 2 நாளில் இருந்து 5 நாட்களுக்குள் குணப்படுத்தி அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்படுகிறனர்.

அதேப்போன்று ஹோம் கொரைன்டைன் பகுதியில் உள்ள நோயாளிகளின் தன்மைக்கு ஏற்ப தினந்தோறும் மருந்துகள், கபசுர மூலிகை குடிநீர், உணவுகள் வழங்கப்பட்டு வருவதுடன் அப்பகுதியில் மாநகராட்சி களப்பணியாளர்கள் உதவியுடன் அனைவருக்கும் நோய் காய்ச்சல் கண்டறியும் மானிட்டர் மூலம் பரிசோதனைகள் செய்து கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர், மற்றும் முககவசங்கள் உடன் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டு அனைத்து பகுதிகளிலும் சுகாதார துறை,

வருவாய்த் துறை, மருத்துவ குழு, காவல்துறை என அனைவரும் ஒருங்கிணைந்து கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதால் பலத்தரப்பட்ட மக்கள் அ.தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை மனமுவந்து பாராட்டுகின்றனர். இதை பொறுத்துக் கொள்ள முடியாது தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொரோனாவுக்கு அரசியல் சாயம் பூசப்பட்டு பொய்யான அறிக்கைகள் மூலம் முதலமைச்சரை விமர்சனம் செய்து எங்களது பணிகளை தடுக்க பார்க்கின்றனர்.

மக்கள் பணிகளை குறை கூறுவதை மு.க.ஸ்டாலின் தவிர்க்க வேண்டும். அறிக்கைகள் விடுவதை விட அரசுடன் இணைந்து செயல்பட தயாரா என்றால் அதுவும் இல்லை. ஏன் எனில் அவர் வெளியில் வந்தால் எங்கு நமக்கு நோய் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பயம் உள்ளது. ஆனால் எங்களுக்கு அந்த பயம் கிடையாது.

மக்களோடு மக்களாக இணைந்து மக்கள் பணியை சிறப்பாக செயல்படுத்துவது தான் அ.தி.மு.க. இயக்கத்தின் லட்சியம் என்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். மேலும் தமிழக அரசு முழுவீச்சில் செயல்படுத்தி வரும் கொரோனா தடுப்பு பணிகளை தவறான கண்ணோட்டத்துடன் மக்களை திசை திருப்ப முயலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர்வது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

இதில் அரசு அதிகாரிகள், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், மற்றும் பகுதி கழக ஜெ.கே.ரமேஷ், பி.ஜே.பாஸ்கர், து.சம்பத், இ.ராஜேந்திரன், வி.கோபிநாத், ஜெஸ்டின் பிரேம்குமார், எம்.மகேந்திரமணி, கே.எச்.பாபு, இமானுவேல், வி.எம்.மதன், மற்றும் பகுதி வட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.