திருவண்ணாமலை

செய்யார் பகுதியில் ரூ.50 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் குளம் சீரமைப்பு பணிகள் – தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியில் ரூ50லட்சத்து 75ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெறும் குளம் சீரமைப்பு பணிகளை தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியில் மாநில நிதிக்குழு மான்ய நிதியின் கீழ் 14குளங்கள் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதை தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். பெருங்களத்தூரில் ரூ3.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது தூசி கே.மோகன் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க செய்யார் ஒன்றியப்பகுதியில் பெருங்களத்தூர், பல்லி, சிறுவெல்லியனூர், விண்ணவாடி, பெரும்பள்ளம், புலியரம்பாக்கம், மாரியநல்லூர், செய்யானந்தல்குண்டில் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குளங்கள் ரூ.50 லட்சத்து 75 ஆயிரத்து 840 ரூபாய் மதிப்பீட்டில் கரை பலப்படுத்துதல் தண்ணீர் வரும்வழி சீரமைத்தல், நீர்போக்கி சீரமைத்தல், சுற்றுச்சுவர் கட்டுதல், படிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இப்பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. கூறினார்.

அப்போது உடன் மாவட்ட இலக்கிய அணிசெயலாளர் எம்.மகேந்திரன், ஒன்றிய செயலாளார் கிருஷ்ணன். கழகத்தினர் பச்சியப்பன், வெங்கடேசன், சபாஷ்டின்துரை, எழில்சுரேஷ், வந்தவாசி விஜய் உள்ளிட்டோர் இருந்தனர்.