மதுரை

அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம்

மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா குற்றச்சாட்டு

மதுரை

திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளில் இருந்து 100 பேர் விலகி மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

மதுரை கிழக்கு வடக்கு ஒன்றிய கழகத்திற்குட்பட்ட மீனாட்சிபுரம் ஊராட்சியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை வீராச்சாமி தலைமையில் 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளில் இருந்து 70 பேரும் என மொத்தம் 100 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

கழகத்தில் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ பேசியதாவது:-

தமிழகத்தில் ஒட்டுமொத்த மக்களின் நல் ஆதரவை பெற்ற அரசாக அம்மா அரசு திகழ்கிறது. இன்றைக்கு எதிர்க்கட்சிகள் மக்களை எண்ணி பாராமல் அரசியல் ஆதாயத்திற்காக பல்வேறு பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றன. ஆனால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

அதேபோல் இன்றைக்கு நீங்கள் பல்வேறு கட்சிகளிலிருந்து அந்த கட்சியின் கோட்பாடுகள் பிடிக்காமல் அங்கிருந்து விலகி இந்த இயக்கத்திற்கு வந்துள்ளீர்கள். நீங்கள் அனைவரும் வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கு நன்றாக பாடுபடுங்கள். உங்களுக்குரிய அங்கீகாரத்தை முதல்வரும், துணை முதல்வரும் நிச்சயம் வழங்குவார்கள்.

இவ்வாறு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பேசினார்.