தற்போதைய செய்திகள்

டிராமா கட்சி தி.மு.க.வை விரட்டியடிப்பதே லட்சியம் – நடிகை விந்தியா சிறப்பு போட்டி

சென்னை

டிராமா கட்சி தி.மு.க.வை விரட்டியடிப்பதே லட்சியம் என்று கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் நடிகை விந்தியா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நமது அம்மா நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-

ஆத்தா என்பது நாகரிக அரசியலின் அடையாளமா? எந்த பயத்தில் இந்த அளவிற்கு கோபம் வருகிறது ராசாவிற்கு,
சாமியை கூட ஆத்தான்னு தான் சொல்லி தான் பழக்கம். அம்மா தான் எங்களுக்கு சாமி. நாங்க எங்க ஆத்தாவின் படத்தையும் கொள்கைகளையும் தூக்கிக்கிட்டு சுத்தறோம்..

தைரியம் இருக்குறவனை அடிச்சா திருப்பி அடிப்பான் கோழைங்க தான் பயத்துல சத்தமா அழுவும். ராஜாவும் அந்தமாறி ஒரு பயந்தாங்கொள்ளி குழந்தை. ஒரு படத்துல வடிவலு, கூட வந்தவனை பயத்தோட கேட்பாரு, ஏண்டா ஏன் கத்தறே.. நீயே மாட்டி விட்டுருவே போலருக்கேனு. அந்த மாறி எங்கயாவது மறுபடி 2ஜி வழக்குல கைது பண்ணி உள்ள தள்ளிடுவாங்களோன்ற பயத்துல அழுவுற பாப்பா தான் ராஜா.

கேள்வி: திமுக மீது ஊழல் வழக்கு இல்லையா?

பதில்: வேலைபாக்காம சம்பளம் வாங்கினவனை பாத்துருப்பீங்க. ஆனா சுயநினைவே இல்லாம ஒரு வருஷம் கருணாநிதி சம்பளம் வாங்கினார். இதுவே எவ்வளவு பெரிய ஊழல் தெரியுமா. தி.மு.க.வுல ஊழல் இல்லைன்னா கனிமொழியும் ராஜாவும் திகார் ஜெயில்ல என்ன திருவிழா கொண்டாடவா போயிட்டு வந்தாங்க.

கேள்வி: ஸ்டாலின் விக் மாற்றியது பற்றி உங்கள் கருத்து

பதில்: உண்மையான விவசாயின்னா உரம் போட்டு மண்ணுல பயிர் நடனும் பாரீன் போயி மண்டையில டேஷ் நடக்கூடாது. இலக்கை நம்பி வாழ்ந்தவன் கூட ஜெயிப்பான். விக்க நம்பி வாழ்ந்தவன் ஜெயிச்சதா சரித்தரமே கிடையாது.

கேள்வி: வடஇந்தியாவில் இருக்கும் திகார் சிறை தமிழகத்தில் தெரிய வந்தது யாரால்,

பதில்: தாத்தா, மொழி வளக்கறேன், மொழி வளக்கறேன்னு மொத்த மக்களையும் ஏமாத்தி வளத்தாரே ஒரு மொழி , கனிமொழி அவங்கலாலத்தான் உள்துறை அமைச்சரை முதல்வர் பாக்க போனதே அவமானம்னா, திகார் ஜெயில்ல ஊழல் பண்ணி உள்ள போன கனிமொழிய எட்டு மந்திரியோடயும் துணைவியோடயும் போயி பாத்த தாத்தாவ என்ன சொல்லுவார் ராஜா.

கேள்வி: அரசியலுக்கு வந்த குறுகிய காலத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி. அவர் அளவிற்கு கட்சி வேலை செய்ய தி.மு.க.வில் வேறு யாரும் இல்லையா?

பதில்: அது ஜமீன் குடும்பம். உழைக்க மட்டும்தான் தொண்டர்கள். பிழைக்க அவங்க வீட்டு பேரன் பேத்திங்க. அம்மாவே மீட்டிங்ல சொல்லி இருப்பாங்க. மகன் துணை முதல்வர். மற்றொரு மகன் மத்திய மந்திரி. மகள் எம்பி. மருமகன் மந்திரி. பேரன் கேபினட் மந்திரி, இது கட்சியா கார்பபரேட் கம்பனியானு அதயேத்தான் எடப்பாடியாரும் கேட்டாரு. இதுல என்ன தப்பு.

கேள்வி: வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டார். முதல்வர் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள். விவசாயிகள் பக்கம் நிற்பது முதல்வரா? எதிர்கட்சிகளா?

பதில்: எதுக்கு எல்லாரும் எங்க முதல்வரை குற்றம் சொல்லறாங்க தெரியுமா. அவங்களுக்கு அட்ரஸ் கிடைக்க. புரியற மாறி சொல்லறேன். கை தட்டல் வாங்க சிங்கம் நடந்தாலே போதும். குரங்குதான் குட்டிக்கரணம் அடிக்கணும். பல பேர் கைதட்டல் வாங்க முதல்வர் மேல பழி சுமத்த குட்டிகரணம் அடிச்சுட்டு இருக்காங்க. ஒரு ஓப்பன் சவால் ஸ்டாலினுக்கு. அவரு வண்டி ஓட்டல்லாம் வேணாம். ஓடற மாட்டு வண்டி மேல ஏறி நிக்க சொல்லுங்க ஸ்டாலின. ஏதோ விக்க வைச்சோமா, வேஷம் போட்டோமா பொட்டல் காட்டுல போட்டோ ஷூட் பண்ணிணோமானு போயிட்டே இருக்கணும். அத விட்டுட்டு நானும் ரவுடி தான் நானும் ரவுடிதான்ற மாதிரி, நானும் விவசாயி, நானும் விவசாயினு வாண்டட்டடா வந்து வாங்கிக் கட்டிக்க கூடாது.

கேள்வி: மக்களோடு இணைந்து களத்தில் இறங்கி மக்களுக்கு துணையாக இருப்பது எதிர்கட்சி தலைவரா? முதல்வரா?

பதில்: அன்பான நேர்மையான எளிமையான அணுகத்தக்க முதல்வர் நம்ப அக்மார்க் விவசாயி எடப்பாடியார். குடும்பத்த தவிர வேற எதுவுமே தெரியாம எல்லா சப்ஜக்ட்லயும் வீக்காயி எப்படா சி.எம் சேர் கிடைக்கும்னு ஆதங்கத்துல அலையறவர் ஸ்டாலின். ஸ்டாலினோட அப்பாவே அவரை நம்பி முதல்வர் நாற்காலிய தரலை. அப்புறம் மக்கள் எப்படி தருவாங்க.

கேள்வி: 2021 சட்டமன்ற தேர்தல் யாருக்கு வெற்றி வாய்ப்பு

பதில்: க்களால் நான் மக்களுக்காகவே நான்னு வாழ்ந்த எங்க அம்மாவோட பிள்ளைகள் எங்கள் மூத்த அண்ணன்கள்,
அவர்களோட தலைமையிலான இந்த அரசு ஒழுங்கான ஊழலற்ற முறையான சரியான ஆட்சிய மக்களுக்கு வழங்கிட்டு வருது. கொட்டும் மழையாகட்டும் கொரோனாவாகட்டும். முதல்ல வந்து முதல்வரா நிக்கறார் நம்ம எடப்பாடியார். எடுத்து சொல்ல எத்தனையோ சாதனைகள் இருக்கு அத விட அதிகமா திமுக செஞ்ச சோதனைகள் இருக்கு. மக்களில் ஒருவர் உங்களில் ஒருவர் எடப்பாடியாரா இல்லை, வீடியோ காலுக்கே விக்கு மாட்டற ஸ்டாலினானு பாத்துடலாம். முஸ்லீம்களை ஏமாத்தற கட்சி இந்து விரோத கட்சி எலெக்சன் டைம்ல மட்டும் கிருஸ்துவர்களை அரவணைக்கற டிராமா கட்சியான தி.மு.க.வ விரட்டி அடிச்சு கோட்டையில கொடியேத்தும் அதிமுக.

கேள்வி: தேர்தலில் உங்கள் பரப்புரை எதனை மையப்படுத்தி இருக்கும்.

பதில்: இப்பவே சொல்லிட்டா எதிரி எஸ்கேப் ஆயிடுவான். சாதனைகளை சொல்லி எங்கள் எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகள் ஓட்டு கேட்பாங்க. நான் என்னால முடிஞ்ச வரைக்கும் இந்த தர்ம யுத்தத்துல ஒரு கேடயமா இருந்து எங்களை நோக்கி வர அம்புகளை தடுத்து திருப்பி அனுப்புற வேலைய பாப்பேன். முக்கியமான விஷயம் துண்டு சீட்டு இல்லாமயே துவைச்சு எடுப்பேன். முக்கியமா 2ஜி மற்றும் இறுதி போர்ல ஈழத்தமிழங்க சாகும் போது கலைஞர் அன்கோவின் கையாலாகாத தனத்தையும் பேசுவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.