தற்போதைய செய்திகள்

ஆர்.கே.நகர்-பெரம்பூரில் 1 லட்சம் பேருக்கு உணவு – மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வழங்கினார்

சென்னை

ஆர்.கே.நகர் மற்றும் பெரம்பூரில் 1 லட்சம் பேருக்கு நேற்று 4-ம் நாளாக வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷ், மாநகராட்சி மண்டல அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் வீடு, வீடாக, சென்று உணவை வினியோகம் செய்தனர்.

மழையினால் பாதிக்கப்பட்ட குடிசைப்பகுதி மக்களுக்கு முதலமைச்சரின் உத்தரவுப்படி 3 வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை தண்டையார்பேட்டை அம்மா அரங்க மாளிகையில் பிரத்யேக சமையல் நிபுணர்களால் சமைக்கப்பட்ட உணவை மினிவாகனத்தில் ஏற்றி பவர்குப்பம், காசிமேடு குடிசை பகுதி, சேனியம்மன் குடிசை பகுதி, திலகர் நகர் சுனாமி குடியிருப்பு குடிசை பகுதி, எச்.எல்.எல். சுனாமி குடிசை பகுதி, அண்ணா நகர், பல்லவன் நகர், திடீர் நகர், வ.உ.சி. நகர், ஜீவா நகர், சிவகாமி நகர், மங்கம்மாள் தோட்டம், சிவன் நகர், தேசியநகர்,

செரியன் நகர், நாகூரான் தோட்டம், பூண்டி தங்கம்மாள் தெரு, ஜெ.ஜெ.நகர், அண்ணா நகர், எழில் நகர் குடிசை பகுதி, பரமேஸ்வரி நகர் குடிசை பகுதி, மற்றும் கொருக்குப்பேட்டை, கொடுங்கையூர், வியாசர்பாடி, மூர்த்திங்கர் நகர் உட்பட்ட பகுதிகளிலும், ஆர்.கே.நகர், பெரம்பூர் பகுதியிலும் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் 1 லட்சம் பேருக்கு மூன்று வேளை தரமான உணவை வினியோகம் செய்து வருவதால் பொதுமக்கள் இடையே முதலமைச்சருக்கு நற்பெயரை ஈட்டியுள்ளது.

இந்நிகழ்வில் மாநகராட்சி மண்டல செயற்பொறியாளர் விக்டர், ஏ.ஆர்.ஒ.சுரேஷ், ஆய்வாளர் ஸ்டாலின் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட, பிற அணி அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உணவு வழங்கும் பணிகளில் ஈடுபட்டனர்.