திருப்பூர்

கழகம் மட்டுமே மக்களுக்காக உண்மையாக செயல்படக்கூடியது – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேச்சு

திருப்பூர்

முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க கோவை மண்டலத்தை சேர்ந்த திருப்பூர் புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் நேர்காணல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தாராபுரம் சிவரஞ்சனி மஹாலில் திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி. ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. நகர கழக செயலாளர் டி. டி.காமராஜ், ஒன்றிய கழக செயலாளர் சின்னப்பன்(எ)பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆலோசனை வழங்கி பேசினார். கூட்டத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளை தேர்வு செய்வது தொடர்பாக நேர்காணல் நடத்தினார்.

பின்னர் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:-

கழகம் என்ற பேரியக்கம் மட்டும் தான் மக்களுக்காகவே உண்மையாக செயல்படும் இயக்கம். திமுக கட்சி அவர்களது குடும்பத்திற்காக செயல்படும் இயக்கம். அதிமுக. வில் சாதாரண தொண்டனும். எம்.எல்.ஏ, எம்.பி உள்ளிட்ட பல்வேறு உயர்ந்த பதவிகளுக்கு வர முடியும். ஆனால் திமுகவில் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் உயர்ந்த பதவிகளுக்கு வர முடியும். `மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்ற தாரக மத்திரத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கி வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சொல்லியதுபோல் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் கழகம் என்ற பேரியக்கம் தான் மக்களுக்காகவே இயங்கும். கழகம் என்ற பேரியக்கம் மட்டும்தான் உண்மையான இயக்கம். நமது கட்சிக்கு பெரிய வரலாறு உள்ளது. 30 வருடங்களுக்கு மேலாக தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக திகழ்கிறது. கட்சியின் அனைத்து செயல்பாடுகளை, ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு தொண்டாற்ற அரசியல் ஒரு ஆயுதமாக உள்ளது. இனிவரும் காலங்களில் தகவல் தொழில்நுட்ப பிரிவை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலை நாடுகள் தொழில்நுட்ப பிரிவை பயன்படுத்துவது போல தகவல் தொழில்நுட்ப பிரிவை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திமுக ஏஜெண்டுகள் மூலம் செயல்படும் கட்சி. ஏஜெண்டுகள் எழுதிக் கொடுக்கும் பொய்யான தகவல்களை ஸ்டாலின் வீட்டின் இருட்டு அறையில் உட்கார்ந்து கொண்டு அறிக்கையாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அ.தி.மு.க உணர்வுபூர்வமான தொண்டர்களைக் கொண்டு இயங்கும் கட்சி. புதியதாக வர உள்ள நிர்வாகிகள் கடுமையான உழைப்பு மற்றும் விடாமுயற்சியுடன் கட்சியில் செயல்பட வேண்டும். சிறப்பாக மக்கள் பணி ஆற்றும் நிர்வாகிகள் தலைமைக்கு தகுந்த நேரத்தில் அடையாளம் காட்டப்படுவார்கள். விரைவில் அனைவருக்கும் புதிய பொறுப்புகளை. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்குவார்கள்.

முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழி நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் பொய்யான பிரசாரங்களை முறியடிக்கும் வகையிலும் பதிலடி கொடுக்கும் வகையிலும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் செயல்பட வேண்டும். ஸ்டாலின் பேச்சை மக்கள் நம்ப மாட்டார்கள். மீண்டும் தமிழக மக்கள் திமுகவினருக்கு பாடம் புகட்டுவார்கள். பொதுமக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை உள்ளவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.

வருகின்ற தேர்தலில் தகவல் தொழில்நுட்ப பிரிவு பணி மிக முக்கிய பங்கு வகிக்கும். அ.இ.அ.தி.மு.க இயக்கம் சக்தி வாய்ந்த இயக்கமாகும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கழகம் என்ற பேரியக்கத்தைத் தொடங்கியபோது இந்த கட்சி 100 நாட்கள் இருக்குமா? என்று கருணாநிதி கேலி, கிண்டல் செய்தார்.

ஆனால் இன்று கட்சி துவங்கி 50 வருடமாகி. மக்கள் பணி தொடந்து நடைபெற்று வருகிறது. விரைவில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் உங்களுக்கெல்லாம் புதிய பொறுப்புகளை அறிவிக்க உள்ளார்கள். நீங்கள் இந்த பொறுப்புக்களை சவாலாக ஏற்றுக்கொண்டு கடுமையாக உழைத்து விடாமுயற்சியோடு கட்சியில் பணியாற்றி வந்தால் பெரிய பதவிகள் உங்களுக்கு கிடைக்கும்.

இவ்வாறு துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.

இக்கூட்டத்தில் நகர கழக அவைத்தலைவர் வெ. தண்டபாணி, மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் எம்.எஸ்.காளீஸ்வரன், ஒன்றிய கழக துணை செயலாளர் குண்டடம் குமாரரத்தினம், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பி. மோகன்ராஜ், ஆவின் துணை தலைவர் டி.எஸ்.சிவக்குமார், முன்னாள் தொகுதி கழக செயலாளர் கே.எஸ்.கோவிந்தராஜ், நகர அர்பன் வங்கி தலைவர் பைப் சாமிநாதன், நகர கூட்டுறவு வங்கி இயக்குநர் பங்க் மகேஷ்குமார், ஜி.ஆர்.பாலு, பேரூராட்சி கழக செயலாளர் சின்னப்பன், மணியக்காரர், கோல்டன் ராஜ், வீராசாமி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.