திருவண்ணாமலை

மாற்றுக்கட்சிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் விலகல் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் கழகத்தில் ஐக்கியம்

திருவண்ணாமலை

மாற்றுக்கட்சிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் விலகி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்டராம்பட்டு ஒன்றியம் ராதாபுரம் ஊராட்சியை சேர்ந்த அமமுக இளைஞரணி நிர்வாகி சிலம்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகியும் புதிதாக இளைஞர்கள் இளம்பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சரும், மாவட்ட ஆவின் தலைவரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். கழகத்தில் இணைந்த அனைவருக்கும் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சால்வை அணிவித்து வரவேற்றார்.