தற்போதைய செய்திகள்

மரக்கன்று நடுவதிலும் அதை பராமரிப்பதிலும் கழக அரசு மிகவும் ஆர்வமுடன் செயலாற்றி வருகின்றது – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பெருமிதம்

ராஜபாளையம்

மரக்கன்று நடுவதிலும் அதை பராமரிப்பதிலும் அதிமுக அரசு மிகவும் ஆர்வமுடன் செயலாற்றி வருகின்றது. என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார். சுற்றுச்சுழலை பாதுகாக்கும் வகையில் விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் பல்வேறு கிராமங்களில் தனியார் அமைப்புகள் மூலமாகவும் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டம் மூலமும் மரக்கன்று வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சில ஊராட்சிகள் பொதுமக்களின் ஒத்துழைப்போடு மரக்கன்று வைத்து வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக சிவகாசி, விருதுநகர், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் மரக்கன்று நடுதல், பராமரிப்பு பணிகள் மிகவும் ஆர்வமுடன் செய்யப்பட்டுள்ளன. இதில் சில ஊராட்சிகளில் கிராம மக்களின் ஆர்வம் அதிகமாக உள்ளன.

இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ராஜபாளையத்தில் அதிமுக சார்பாக மரக்கன்று நடும் விழா முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் முருகையாபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மரக்கன்று நடும் விழாவை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்ததாவது:-

உலக வெப்பமயமாகுதலை தடுக்கும் விதமாக மரக்கன்றுகளை நடும் பழக்கம் நம்மிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மரக்கன்று நடுவதிலும் அதை பராமரிப்பதிலும் கழக அரசு மிகவும் ஆர்வமுடன் செயலாற்றி வருகின்றது. விருதுநகர் மாவட்டத்தில் மரக்கன்றுகள் வளர்க்கும் பழக்கும் அதிகரித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. நாம் வளர்க்கும் மரக்கன்று வரும் தலைமுறையையும், நம்மையும் வாழ்த்தும். ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.