திருவள்ளூர்

தொழுதாவூர் கிராமத்தில் மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம்

திருவள்ளூர்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவலாங்காடு ஒன்றியத்தில் உள்ள தொழுதாவூர் கிராமத்தில் மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம் திருவாலங்காடு ஒன்றிய கழக செயலாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.

இதில் திமுக கட்சியின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் எஸ்.ராமகணேஷ் தலைமையில் தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சியில் இருந்து விலகி திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா முன்னிலையில் 200-க்கும் மேற்பட்டோர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

ருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட திருவலாங்காடு, பெரிய களக்காட்டூர், கூர்ம வியாசபுரம், காவேரிராஜபுரம், அத்திப்பட்டு, வீரராகவபுரம், பழையனூர், அரிச்சந்திர புரம், பாகசாலை, சின்னம்மா பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த திமுக மற்றும் அமமுக நிர்வாகிகளை திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் திருவாலங்காடு ஒன்றிய கழக செயலாளர் என்.சக்திவேல், மாவட்ட இணை செயலாளர் விஜயலட்சுமி ராமமூர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர் ஜி.ஆனந்தன், எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய இணைச்செயலாளர் செல்வராஜ், ஒன்றிய இளைஞர் அணி பொருளாளர் மேகநாதன், மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் இந்திரசேனன், திருவாலங்காடு கூட்டுறவு சங்க தலைவர் கமலநாதன், காவேரிராஜபுரம் கவுன்சிலர் டில்லிபாபு மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.