சிறப்பு செய்திகள்

குடியரசு துணைத்தலைவருக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து

சென்னை

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:-

மூத்தோர் அமரும் மாநிலங்களவையின் தலைவராக சகாப்தத்தை ஏற்படுத்தும் வகையில், 3 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இந்த நாள், நாடாளுமன்ற அவைகளுக்கு மகிமை பொருந்திய நாளாக அமைந்துள்ளது.

துணை ஜனாதிபதியின் நோக்கம், இணைப்பு மற்றும் தொடர்பு ஆகியவை, அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்ததோடு, குறுகிய காலத்தில் சட்ட ரீதியான அலுவல்களை இதுவரை இல்லாத அளவில் மேற்கொள்ள உதவியது.

இனி வரும் ஆண்டுகளில் உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும், புகழ்ச்சியையும் அளிக்க வேண்டும் என்று இந்த மகிழ்ச்சியான தருணத்தில் வேண்டுகிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.