சிறப்பு செய்திகள்

உச்சநீதிமன்றத் தீர்ப்பு பெண்களின் முன்னேற்றத்துக்கு வலுசேர்க்கும் – துணை முதலமைச்சர் வரவேற்பு

சென்னை

உச்சநீதிமன்றத் தீர்ப்பு பெண்களின் முன்னேற்றத்துக்கு வலுசேர்க்கும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்து வாரிசு உரிமைச் சட்டம் – 2005 நிறைவேற்றப்படுவதற்கு முன்பே பெற்றோர் இறந்துவிட்டாலும், அவர்களது சொத்தில் மகள்களுக்கு சம உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு ஒன்றினை வழங்கியுள்ளது.

இதுகுறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், சமூகநீதியை நிலைநாட்டும் வகையில், உச்ச நீதிமன்றம் “பூர்வீக சொத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உண்டு” என்று வழங்கியுள்ள தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன். இத்தீர்ப்பால், சமூகநீதி நிலைநாட்டப்பட்டதுடன், பெண்கள் முன்னேற்றத்திற்கு இது மேலும் வலுசேர்ப்பதாக அமையும் என்று பதிவிட்டுள்ளார்.