சிறப்பு செய்திகள்

12-ந்தேதிக்குள் கழக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-முதலமைச்சர் பேட்டி

சென்னை

வரும் 12-ந்தேதிக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

தலைமை கழகத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி ேக.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

ஊடகத்திலும், பத்திரிக்கையிலும் பரபரப்பாக செய்திகள் வரவேண்டும் என்பதற்காக வேட்பாளர் பட்டியிலில் இழுபறி என்று வெளியிட்டு வருகிறீர்கள். அப்படி எதுவும் இல்லை. தொகுதி பங்கீடு நடைபெற்று வருகிறது. விரைவில் அது நிறைவு பெறும். வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். 12-ந் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகிறது. அதற்குள் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலிலே எங்களோடு கூட்டணி வைத்தவர்கள் தொடர்ந்து இடம் பெறுகிறார்கள். சிறிய கட்சிகள் தற்போது இடம்பெறுகிறது.

பேச்சுவார்தை நடைபெற்று வருகிறது. அதனை நிறைவு செய்கின்றபோது உங்களை அழைத்து நிச்சயமாக தெரிவிப்போம். 11-ந் தேதிக்குள் அனைத்தும் முழுமையாக நிறைவு பெற்றுவிடும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.