தமிழகம்

தங்க பதக்கம் பெற்று தமிழகத்தின் பெருமையை நிலைநாட்ட வேண்டும்-கழக ஒருங்கிணைப்பாளர் வாழ்த்து

சென்னை, ஜூலை 9-

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக தடகள வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்கப்பதக்கங்களை பெற்று தமிழகத்தின் பெருமையை உலக அளவில் நிலைநாட்ட வேண்டும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்தி உள்ளார்.

இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

வருகின்ற ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஜப்பான் நாட்டின் டோக்கியாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் தடகள விளையாட்டில் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில், ஆண்கள் பிரிவில் பங்கு பெற தகுதி பெற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்.ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி மற்றும் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலப்பு பிரிவில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர் ஆகியோருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டு அவர்கள் அனைவரும் தங்க பதக்கங்களை பெற்று தமிழகத்தின் பெருமையை உலக அளவில் நிலைநாட்ட வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.