தற்போதைய செய்திகள்

மேற்கு ஆரணி ஒன்றிய அலுவலக கட்டட பணி – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் மேற்கு ஆரணி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டும் பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள மேற்கு ஆரணி ஒன்றிய அலுவலகம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இக்கட்டடம் மிகவும் பழுதான நிலையில் இருந்தது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்றார்.

இதையடுத்து மேற்கு ஆரணி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட ரூ. 2 கோடியே 93 லட்சம் ரூபாய் நிதியை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்தார். அதைத்தொடர்ந்து கடந்த ஜூன் 8-ம்தேதி காணொளி காட்சி மூலம் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணியை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அதன்படி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் நேற்று அந்த பணியை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது அரசு வழக்கறிஞர் க.சங்கர், மாவட்ட ஆவின் தலைவர் பாரி பி.பாபு, மாவட்ட கூட்டுறவு சங்கத்தலைவர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் எ.கோவிந்தராசன். ப.திருமால், மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் எம்.வேலு, நகர செயலாளர் எ.அசோக்குமார், மேற்கு ஆரணி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் ஆ.வேலாயுதம், முன்னாள் கவுன்சிலர் புங்கம்பாடி சுரேஷ். பிஸ்கட் குமரன், ஐடி விங் மாவட்ட செயலாளர் சரவணன், தச்சூர் ஏழுமலை, விண்ணமங்கலம் தலைவர் காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.