தற்போதைய செய்திகள்

கழக உடன்பிறப்புகள் ஒத்துழைப்புடன் பிரம்மாண்டமான வெற்றி பெறுவேன்

திருப்பத்தூர் தொகுதி வேட்பாளர் மருது அழகுராஜ் உறுதி

திருப்பத்தூர்

திருப்பத்தூர் தொகுதியில் கழக உடன்பிறப்புகள் ஒத்துழைப்புடன் பிரம்மாண்டமான வெற்றியை ஈட்டுவேன் என்று கழக வேட்பாளர் மருது அழகுராஜ் உறுதிபட தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கழக செய்தி தொடர்பாளரும், நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியருமான மருது அழகுராஜ் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி வருமாறு;-

கழகத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை ஒரு எழுத்தாளனான எனக்கு கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரும் வழங்கி இருக்கிறார்கள்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் 11 வருடங்கள் ஊழியராக பணிபுரிந்த எனக்கு நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியராக பணிபுரியும் வாய்ப்பை வழங்கிய அவர்கள் தற்போது திருப்பத்தூர் தொகுதியில் ேபாட்டியிடும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள். நிச்சயமாக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் கழக உடன்பிறப்புகள் ஒத்துழைப்போடு வெற்றியை ஈட்டி வந்து தலைமையின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பேன்.

கடந்த 10 வருடங்களாக கழக அரசு மக்களுக்கு செய்திருக்கும் தொண்டுகள், இந்தியாவிலேயே சிறந்த அரசாங்கத்தை தந்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடியாரின் பொற்கால ஆட்சிகளின் பெருமைகளை மக்களுக்கு விலாவாரியாக எடுத்துரைப்பேன். கழக அரசின் பெருமைகளை சொல்லி, கழக அரசின் சாதனைகளை முன் வைத்து ஒரு பிரம்மாண்டமான வெற்றியை திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் நான் நிச்சயம் ஈட்டி வருவேன்.

இவ்வாறு திருப்பத்தூர் தொகுதி கழக வேட்பாளர் மருது அழகுராஜ் கூறினார்.