தமிழகம்

அமெரிக்கத் துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து

சென்னை

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுடன் நடைபெறவுள்ள துணை அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.இவருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-

அமெரிக்கா ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது, இந்தியாவையும், குறிப்பாக தமிழகத்தையும் பெருமை கொள்ளச் செய்யும் தருணமாக அமைந்துள்ளது. இவர் அமெரிக்காவின் செனட் அவையின் முதல் உறுப்பினர்.கமலா ஹாரிசின் தாயார் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. எனது மனமார்ந்த வாழ்த்துகளை கமலா ஹாரிசுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.