திருவண்ணாமலை

10ம் வகுப்பு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தங்கநகை பரிசு – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தகவல்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்சோழங்குப்பம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டிய வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தங்கநகை பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மேல்சோழங்குப்பம் பகுதியில் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. திட்டப்பணிகளை பார்வையிட்டார். தற்போது 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியான நிலையில் மேல்சோழங்குப்பம் அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை அழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார்.

அப்போது வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு வருடந்தோறும் தங்க நகைகள் பரிசாக வழங்கி வருகிறேன், அதேபோல் இந்த ஆண்டும் தொகுதியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு தங்க நகை பரிசளிக்க உள்ளேன், மேலும் அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கும் தங்க நகைகள் பரிசுகள் வழங்கப்படும் என்றார்.

மேலும் 12-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு வருடந்தோறும் பரிசுகள் வழங்கி வருகிறேன். மேலும் கிராமப்புற மாணவர்கள் போட்டி நிறைந்த உலகத்தில் நகர்ப்புற மாணவர்களிடம் போட்டியிடும் அளவிற்கு தங்களை வளர்த்து கொள்ள வேண்டும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மேலும் கல்வி பயில வசதியான கட்டமைப்புகளுடன் பள்ளிகள் உள்ளன. ஆகையால் கிராமப்புற மாணவர்கள் சிறப்பாக பயின்று வாழ்கையில் முன்னேறுங்கள்.

இவ்வாறு வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கூறினார்.