தற்போதைய செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் 28016 பயனாளிகளுக்கு ரூ.139 கோடியே 72 லட்சம் வேளாண் கடன் தொகை தள்ளுபடி – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் 28016 பயனாளிகளுக்கு ரூ.139 கோடியே 72 லட்சம் வேளாண் கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பி.செட்டிஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் 10 மகளிர் சுயஉதவிக் குழுக்களை சார்ந்த 160 உறுப்பினர்களுக்கு ரூபாய் 1 கோடியே 95 ஆயிரம் மதிப்பில் சிறப்பு கடன் உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அ.கோவிந்தசாமி, அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

தருமபுரி மாவட்டத்தில் 131 தொடக்க வேளாண்மைக்கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமும் 2 மலைவாழ் மக்கள் பெறும் பலநோக்கு கூட்டுறவு கடன் சங்க மூலமும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், வகையீட்டின் பேரில் விவசாய நகை கடன்கள், பண்ணை சார்ந்த நீண்ட கால கடன்கள், மத்திய கால கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளி கடன் டாப்செட்கோ போன்ற கடன்கள் வழங்கி விவசாயத்திற்கு சேவை செய்து வருகிறது.

2019-2020-ம் ஆண்டிற்கு குறியீடு ரூ.260.00 கோடி ஆகும். இதனில் 44,637 விவசாயிகளுக்கு ரூ.314.12 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டிற்கு குறியீடு ரூ.325.00 கோடி ஆகும். இதனில் ஜூலை 2020 முடிய விகிதாச்சார குறியீடு ரூ.55.00 கோடியில், ஜூலை 2020 முடிய விவசாயிகளுக்கு ரூ.39.66 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.மேலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தவணை தவறாது திரும்ப செலுத்துபவருக்கு 7 சதவீத வட்டித்தொகை முழுவதையும் அரசே ஏற்றுக் கொண்டு வட்டியே இல்லாத விவசாயக் கடன் வழங்கப்பட்டு வருகிறது

2019-2020-ம் ஆண்டிற்கு குறியீடு ரூ.12.90 கோடி ஆகும். இதனில் 1,189 விவசாயிகளுக்கு ரூ.10.92 கோடி மத்திய கால கடனாக வழங்கப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டிற்கு குறியீடு ரூ.13.50 கோடி ஆகும். இதனில் ஜூலை 2020 முடிய விகிதாச்சார குறியீடு ரூ.2.01 கோடியில், ஜூலை 2020 முடிய 286 விவசாயிகளுக்கு ரூ.3.31 கோடி மத்திய கால கடனாக வழங்கப்பட்டுள்ளது.

2019-2020-ம் ஆண்டிற்கு குறியீடு ரூ.10.68 கோடி ஆகும். இதனில் 220 விவசாயிகளுக்கு ரூ.4.87 கோடி தானிய ஈட்டுக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டிற்கு குறியீடு ரூ.10.00 கோடி ஆகும். இதனில் ஜூலை 2020 முடிய விகிதாச்சார குறியீடு ரூ.2.45 கோடியில், ஜூலை 2020 முடிய 65 விவசாயிகளுக்கு ரூ.1.46 கோடி தானிய ஈட்டுக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

2018-19-ம் ஆண்டிற்கு குறியீடு ரூ.8.50 கோடி ஆகும். இதனில் 2529 உறுப்பினர்களுக்கு ரூ.12.77 கோடி டாப்செட்கோ கடன் வழங்கப்பட்டுள்ளது. 2019-20-ம் ஆண்டிற்கு குறியீடு ரூ.8.50 கோடி ஆகும். இதனில் 3777 உறுப்பினர்களுக்கு ரூ.22.41 கோடி டாப்செட்கோ கடன் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டிற்கு குறியீடு ரூ.10.00 கோடி ஆகும். இதனில் உறுப்பினர்களுக்கு ரூ.22.58 கோடி டாப்செட்கோ கடன் வழங்க உரிய முன்மொழிவு சென்னை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆக மொத்தம் சுமார் ரூ.40.00 கோடி அளவிற்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காலத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்க தருமபுரி மாவட்டத்திற்கு ரூ.988 கோடி நிதியை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார்.

2019-20-ம் ஆண்டிற்கு குறியீடு ரூ.6.23 கோடி ஆகும். இதனில் 2613 உறுப்பினர்களுக்கு ரூ.7.95 கோடி சிறுவணிக கடன் வழங்கப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டிற்கு குறியீடு ரூ.8.41 கோடி ஆகும். இதனில் ஜூலை’2020 முடிய விகிதாச்சார குறியீடு ரூ.2.44 கோடியில், ஜூலை’ 2020 முடிய 767 விவசாயிகளுக்கு ரூ.3.41 கோடி சிறுவணிகக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகளின் கடன் சுமையை நீக்கும் வண்ணம் அறிவித்த வேளாண் கடன் தள்ளுபடி திட்டம், 2016-ன்படி கூட்டுறவு நிறுவனங்களில் 31.03.2016-ல் நிலுவையுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் பெற்றுள்ள குறுகிய கால பயிர்க்கடன்கள், நகையீட்டின் பேரில் வழங்கப்பட்ட விவசாய கடன்கள், மத்திய கால கடனாக மாற்றியமைக்கப்பட்ட குறுகிய கால கடன்கள், மத்திய கால வேளாண் கடன்கள் மற்றும் பண்ணை சார்ந்த நீண்ட காலக் கடன்கள் ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டன. இதன்படி தருமபுரி மாவட்டத்தில் 28016 பயனாளிகளுக்கு ரூ.139 கோடியே 72 லட்சம் வேளாண் கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் நடத்தப்படும் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் 449 முழு நேர நியாயவிலைக்கடைகளும், 563 பகுதி நேர நியாய விலைக்கடைகளும், 9 மகளிர் நியாய விலைக்கடைகளும் என ஆக மொத்தம் 1021 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நியாய விலை கடைகளில் 3,89,520 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் ’2011 திங்கள் முதல் விலையில்லா அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்கும் கடனுதவிகளை முறையாக பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராமதாஸ், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) தணிகாசலம், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.வி.அரங்கநாதன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் தொ.மு.நாகராஜன், தருமபுரி கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல், ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் எம்.பழனிச்சாமி, கூட்டுறவு சங்க தலைவர் முத்துராஜ், வட்டாட்சியர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பழகன், கௌரி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.