தற்போதைய செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் 2 ஜிபி டேட்டா வழங்கியது கழக அரசு – அமைச்சர் எம்.சி.சம்பத் பிரச்சாரம்

சென்னை

கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப், 2 ஜிபி டேட்டா வழங்கியது கழக அரசு என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

கடலூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளரும், கடலூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், தொழிற்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் அழகிய நத்தம், வெள்ளபாக்கம், காராமணிக்குப்பம், வரக்கால்பட்டு, மருதாடு, தோட்டப்பட்டு ஆகிய ஊராட்சிக்குட்பட்ட 16 கிராமங்களில் வாக்காளர்களை சந்தித்து இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்குசேகரித்தார்.

அப்போது வாக்காளர்கள் மத்தியில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

முதலமைச்சரின் தேர்தல் அறிக்கை ஒரு சிறந்த தேர்தல் அறிக்கை. எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத திட்டங்கள் தமிழகத்திலேயே அதிகமாக உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்களும் கல்லூரி இளைஞர்களும் கூடியுள்ளீர்கள்.

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கிய அரசு கழக அரசு. தற்போது கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா இலவசம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலம் ஏராளமான மக்கள் தமிழகத்தில் பயன்பெற்றுள்ளனர்.

விலையில்லா ஆடு மாடு கோழிகள் இந்த கிராமத்தில் உள்ள பல மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் நலத்திட்டங்கள் செல்லாத வீடுகளே தமிழகத்தில் இல்லை எனலாம். மக்கள் நலனை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு அம்மாவின் வழியில் நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கின்றார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.

கடந்த 2016-ம் ஆண்டு அம்மா அவர்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்த வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்ற திட்டத்தை செயல்படுத்தி அம்மாவின் வழி வந்த அரசு இது என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க நானும் துணை நிற்க கடலூரில் எனக்கு இரட்டைஇலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

இந்த பிரச்சாரத்தில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல் ஜி.ஜே.குமார், கடலூர் ஒன்றியக்குழுத்தலைவர் தெய்வ.பக்கிரி, ஒன்றிய செயலாளர் பி.வி.ஜே.முத்துக்குமாரசாமி, மாவட்ட ஒன்றிய துணை செயலாளர் டி.எஸ்.ஆர் மதிவாணன், ஒன்றிய செயலாளர் பி.வி.ஜே.முத்துக்குமாரசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.