தற்போதைய செய்திகள் மற்றவை

சென்னை மக்களுக்கு கழகம் சார்பில் பிரியாணி-மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி வழங்கினார்

சென்னை

முழு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சென்னை விருகம்பாக்கம் தொகுதி மக்களுக்கு மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி பிரியானி வழங்கினார்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள முழுஊரடங்கு காரணமாக விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட 138-வது வார்டு அம்பேத்கர் குடியிருப்பில் பாதிக்கப்பட்டுள்ள 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பிரியாணி, தண்ணீர் பாட்டில், முகக் கவசம் ஆகியவற்றை தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட கழக செயலாளரும், விருகம்பாக்கம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கபசுரக் குடிநீர், முகக் கவசம், கிருமி நாசனி ஆகியவை வழங்கப்பட்டது.