தற்போதைய செய்திகள்

ராஜபாளையத்தில் சுதந்திர தின நினைவு அலங்கார வளைவு – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்

விருதுநகர்

ராஜபாளையத்தில் சுதந்திர தின நினைவு அலங்கார வளைவை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோபராமானுஜர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் விதமாக 1947-ல் அலங்கார வளைவு அமைக்கப்பட்டது. அந்த வளைவு சில மாதங்களுக்கு முன் பழுதடைந்து காணப்பட்டது.
ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பாக இந்த அலங்காரவளைவு புனரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

இந்த சுதந்திர நினைவு அலங்கார வளைவை விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோப ராமானுஜர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் சுதந்திர தின வளைவில் கேடயம் நிறுவும் நிகழ்ச்சியும் நடந்தது. கோ பூஜைக்கு பிறகு இஸ்லாமிய முறைப்படி வழிபாடு நடந்தது. வளைவில் சிங்கம், எருது, மீன், யானை உருவம் பொறித்த தங்க நிற கேடயங்களை அமைச்சர் கே.டிராஜேந்திரபாலாஜி, ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் ஆகியோர் நிறுவினர். நிகழ்ச்சியில் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் பங்கேற்றார்.

பின்னர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியளர்களிடம் கூறுகையில், விருதுநகர் மாவட்டம், சுதந்திர இந்தியாவிற்கு பாடுபட்ட மாவட்டமாக திகழ்கிறது. அதற்கு உதாரணமாக முன்னாள் முதல்வர் பி.எஸ்.குமாரசாமி ராஜா சென்னை மாகாண முதல்வராக இருந்துள்ளார். அதேபோல் பெருந்தலைவர் காமராஜர் உட்பட பல சுதந்திர போராட்ட வீரர்கள் விடுதலை தியாகிகள் விருதுநகர் மாவட்டத்தில் இருந்ததற்கு அடையாளமாக திகழ்கிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் அரவிந்த் ஹெர்பல் நிறுவனத்தின் உரிமையாளர் அரவிந்த், ராஜபாளையம் நகர அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் முருகேசன், ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்க தலைவர் வனராஜ், ராஜபாளையம் மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணராஜா, ராஜபாளையம் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் முருகையாபாண்டியன், நகர அவைத்தலைவர் பரமசிவன், மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் கிருஷ்ணராஜ், ராஜபாளையம் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் அழகுராணி, மதுரை ஏர்போர்ட் அத்தாரிட்டி கமிட்டி உறுப்பினர் எஸ்.எஸ்.கதிரவன், மாவட்ட மாணவரணி செயலாளர் நல்லதம்பி,