தற்போதைய செய்திகள்

தி.மு.க.வினருக்கு மட்டுமே தடுப்பூசிகள் விநியோகம்-தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் குற்றச்சாட்டு

சென்னை

தி.மு.க.வினருக்கு மட்டுமே தடுப்பூசி விநியோகம் செய்யப்படுவதாக தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்

சென்னை குரோம்பேட்டையில் பல்வேறு அமைப்புகள் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் பேசியதாவது:-

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள், கொரோனா தடுப்பூசி ஆகியவை தி.மு.க.வினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. நிவாரண தொகையை பொதுமக்கள் வங்கி கணக்கில் நேரிடையாக செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆரம்பத்தில் ஆர்வமாக தடுப்பூசி செலுத்த வந்த பொதுமக்களுக்கு சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது ராகுல்காந்தியும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.