தற்போதைய செய்திகள்

தீ விபத்தில் வீடுகளை இழந்த 3 குடும்பங்களுக்கு நிவாரண உதவி-மரகதம் குமரவேல் எம்.எல்.ஏ வழங்கினார்

திருப்போரூர்

செங்கல்பட்டு மாவட்டம் கழனிப்பாக்கம் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் குடிசை வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட 3 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை கே.மரகதம் குமரவேல் எம்.எல்.ஏ வழங்கினார்.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் அச்சரபாக்கம் ஒன்றியம், கூடலூர் ஊராட்சிக்குட்பட்ட கழனிப்பாக்கம் பகுதியில் மின்கசிவின் காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் 3 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமானது.

இதனையறிந்த மதுராந்தகம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினரும், காஞ்சிபுரம் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.மரகதம் குமரவேல் சம்பவ இடத்துக்கு பார்வையிட்டு குடிசை வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது தன் சொந்த நிதியில் இருந்து முதல்கட்ட நிவாரணமாக சேலை, போர்வை, அரிசி, காய்கறிகளையும், உதவித்தொகையாக தலா ரூ.5 ஆயிரத்தையும் வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசுமை வீடு கட்டுவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் அவர் உறுதி அளித்தார்.

இந்நிகழ்வின்போது அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பெரும்பாக்கம் சி.விவேகானந்தன், அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அனந்தமங்கலம் பி.சுப்பிரமணியம், திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தையூர் எஸ்.குமரவேல், கூடலூர் பகுதியை சேர்ந்த கிளை கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.