தமிழகம்

ஜனவரி 15ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் – தலைமைத் தேர்தல் அதிகாரி

சென்னை

இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 15ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் ஜனவரி 1ஆம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப்படுவதாகவும், இதற்காக நவம்பர் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1ஆம் தேதி 18 வயது நிறைவடைபவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் அனுமதிக்கப் படுகிறது. பெயர் சேர்த்தல், திருத்தல் பணிகள் முடிவுற்று, சரிபார்க்கப்பட்டு, ஜனவரி 15ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தலமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.