தமிழகம்

6 மாதம் ஓய்வூதியத் தொகையை வங்கியிலிருந்து எடுக்காவிட்டால் ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவு

சென்னை

தொடர்ந்து ஆறு மாதங்களாக வங்கிக்கணக்கில் இருந்து ஓய்வூதியத் தொகையை எடுக்காதவர்களின் ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்தி வைக்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்பூதியம் ஆகியவை வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகின்றன.

இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக ஓய்வூதியத் தொகையை வங்கிக் கணக்கில் இருந்து எடுக்காதவர்களின் விவரங்களைக் கருவூலத்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் எனத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அவ்வாறு ஓய்வூதியத் தொகையை எடுக்காதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்தி வைக்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் இறப்புக்குப் பிறகும் அவர்களின் வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியம் செலுத்துவதைத் தவிர்க்கவே இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகக் கருவூலத்துறையின் ஆணையர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.