தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் இன்று 5,890 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சத்து 44 ஆயிரத்தை எட்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று காரண மாக 120 பேர் பலியானதால், மொத்த உயிரிழப்பு 5 ஆயிரத்து 886 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5 ஆயிரத்து667 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

சென்னையில் 1 185 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. கோவையில் புதிதாக 393 நபர்களுக்கும், கடலூரில் 390 பேருக்கும், திருவள்ளூரில் மேலும் 308 நபர்களுக்கும், தேனியில் 279 பேருக்கும், சேலத்தில் 268 நபர்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 224 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.