தற்போதைய செய்திகள்

அரசை தேடி மக்கள் சென்ற காலம் போய் மக்களை தேடி அரசு சென்று உதவுகிறது – சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ பெருமிதம்

திருவள்ளூர்

அரசை தேடி மக்கள் சென்ற காலம்போய் மக்களை தேடி அரசு சென்று உதவுகிறது என்று சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோழவரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் பஞ்சாயத்தில் மக்கள் வீட்டிலிருந்தபடியே இ‌‌-சேவை மூலமாக பட்டா, முதியோர் ஓய்வவூதியம், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், ஆகியவை பெற்றுக்கொள்ள அறிவிப்பாணையை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார். அதன்படி நேற்று நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் இ-சேவை மூலமாக பதிவு செய்து மனுக்கள் பெறப்பட்டன.

இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

பொன்னேரி ஜமாபந்தி துவக்க நாளான இன்று நம்முடைய தொகுதி சார்ந்த மக்கள் வீட்டிலிருந்தபடியே இ-சேவை மூலமாக பட்டா, ஜாதி சான்றிதழ் முதியோர் உதவித்தொகை மற்றும் அனைத்து உதவிகளையும் இ-சேவை மூலமாக வீட்டிலிருந்தபடியே பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பினை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருக்கின்றார்.

இதன் மூலம் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பொன்னேரி தொகுதியில் உள்ள சோழவரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம், ஞாயிறு ஆரணி, பொன்னேரி, திருப்பாலைவனம், கோலூர், மீஞ்சூர், காட்டூர், பஞ்சாயத்துகளில் ஜமாபந்தி பணியை மக்களுக்கு துவக்கி வைத்துள்ளோம்.

இதன் மூலமாக நம்முடைய தொகுதியைச் சார்ந்த மக்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் இ-சேவை மூலமாக அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசும் இந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நானும் தயாராக உள்ளோம். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மக்கள் அரசை தேடி சென்ற காலம் போய் மக்களைத்தேடி அம்மாவின் அரசு சென்று கொண்டிருக்கிறது.

இந்த கொரோனா வைரஸை ஒழிக்க அனைவரும் ஒத்துழைப்பு தந்து, ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் 5300க்கும் மேற்பட்டோருக்கு தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கு அவர்களது வீட்டுக்கே சென்று தலா 1,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நானும் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் , ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் கழக நிர்வாகிகள் சேர்ந்து அந்தப் பணியை துவக்கி உள்ளோம்.

அதேபோல் முதியோர் உதவித்தொகை ஒரு சிலருக்கு விடுபட்டிருந்தால், விடுபட்டவர்களுக்கு புதிதாக முதியோர் உதவித்தொகை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதற்காக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பிலும், பொன்னேரி தொகுதி மக்களின் சார்பாகவும் எங்களது மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நிகழ்வானது கொரோனா வைரஸை ஒழிக்க அனைவரும் வீட்டிலிருந்தபடியே அனைவரும் சிறப்பான முறையில் இந்நிகழ்வை சிறப்பாக செய்து முடிக்க ஒத்துழைப்பு தருமாறு உங்களுடைய பொற்பாதங்களை தொட்டு கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய செவிலியர்கள் மருத்துவர்கள் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் சிறப்பான முறையில் தமிழகத்தில் பொன்னேரி தொகுதியை முதன்மையான தொகுதியாக சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டியுள்ளது. முதலமைச்சர் கூறியதுபோல தனித்திரு விலகி இரு வீட்டில் இரு என்ற வாசகத்திற்கு ஏற்ப இருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மணிகண்டன், ஒன்றிய கழக செயலாளர் கார்மேகம், முன்னாள் சோழவரம் ஒன்றிய செயலாளர் ஆர்.பிரகாஷ், கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பஞ்சட்டி கே.நடராஜன், கிளை செயலாளர் மோகன் பாபு, ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ், முன்னாள் தலைவர் சம்பத், லோகநாதன், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.