தற்போதைய செய்திகள்

கல்வி பணிகளுக்கு முன்னுரிமை -வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ உறுதி

மதுரை

கல்வி பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உறுதி அளித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்களிடம் குறைகளை கேட்டிருந்தார் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அதனைத்தொடர்ந்து அங்கு இருந்த பள்ளிகளை ஆய்வு செய்து தேவையான அடிப்படை பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார். மேலும் சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை பணிகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொண்டார்

அதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பாரப்பத்தி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னத்துரை, வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏவிடம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோரிக்கை மனு அளித்தார்.

அப்போது நிச்சயம் எனது சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் செய்து தருவேன் என்றும் அம்மாவின் அரசு மடிக்கணினி உடன் 14 வகை கல்வி உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கியது தொடர்ந்து கழக ஒருங்கிணைப்பாளர்கள் வழிகாட்டுதல்படி கல்விக்கு எனது சட்டமன்ற உறுப்பினரின் கீழ் முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார்.

இந்த நிகழ்வின் போது மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா, நாட்டாமை பழனிகுமார், ஆசிரியர் வரதராஜன், கிளை செயலாளர் பூசாரி, மொக்கச்சாமி மற்றும் பலர் உடனிருந்தனர்