திருவள்ளூர்

திருவொற்றியூர் பகுதி காங்கிரசிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் விலகி மாதவரம் வி.மூர்த்தி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

அம்பத்தூர்

திருவொற்றியூர் பகுதி காங்கிரஸ் கட்சியிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் விலகி திருவள்ளூர் மாவட்ட கழக செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக, காங்கிரஸ் அமுமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து பலரும் விலகி கழகத்தில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட 29-வது வட்ட காங்கிரஸ் கட்சியில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி வட்டக் கழக செயலாளர் ராகவா எம்.சாக்ரடீஸ், ஏற்பாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி.மூர்த்தி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் டி.வேலாயுதம், புழல் ஒன்றிய கழக செயலாளர் ஆர்.சுப்பிரமணி, முன்னாள் மண்டலக்குழு தலைவர் கே.தங்கசிவம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் மூ.தமிழரசன், மாவட்ட பிரதிநிதி மு.கண்ணதாசன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அஜாக்ஸ், எஸ்.பரமசிவம், வட்டக் கழக செயலாளர் ராகவா எம்.சாக்ரடீஸ் ராஜேஷ், சேகர் புழல் சபாபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.