திருவள்ளூர்

தி.மு.க, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து 200 பேர் விலகி சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ முன்னிலையில் கழகத்தில் ஐக்கியம்

திருவள்ளூர்

தேமுதிக, பாமக, திமுகவிலிருந்து 200க்கும் மேற்பட்டோர் விலகி திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்த்தில் தேமுதிக.வை சேர்ந்த மெதிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பழனி, நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன், பா.ம.க.வை சேர்ந்த ஏடூர் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை, திமுகவைச் சேர்ந்த ஓப.சமுத்திரம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முருகன் மற்றும் தி.மு.க அ.ம.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியும், புதியதாகவும் இளைஞர்கள் இளம்பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார், திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

கழகத்தில் இணைந்த அனைவருக்கும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் சால்வை அணிவித்து அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கும்மிடிப்பூண்டி ஒன்றிய கழக செயலாளர் வி.கோபால்நாயுடு செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் பேசியதாவது:-

கழகத்தை சீரோடும் சிறப்போடும் நடத்திக் கொண்டிருக்கின்ற கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளராக நான்காவது முறையாகவும் ஆறு ஆண்டு முடிந்து 7 ம் ஆண்டு தொடக்கமாகவும் எல்லாம் வல்லஇறைவன் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு என்றைக்கும் உயிருள்ளவரை மறக்க மாட்டேன்.

இந்த பெருமை எல்லாம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கே சேரும். அந்த வகையில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த பெரிய மாவட்டத்தை கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப்பணி சிறப்பாக அமையவும், இரண்டு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற முறையில் திரும்பவும் என்னை மாவட்ட செயலாளராக பணியாற்ற வாய்ப்பளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி மக்களின் சார்பாகவும் என்னுடைய சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்சிக்கொடி கட்டிய தொண்டனும் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய இயக்கம் நம்முடைய கழகம். எளிய தொண்டனும் முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு நம்முடைய கழகத்தில் மட்டும்தான். அதேபோல் கழக நிர்வாகிகள் அனைவரும் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி ஒவ்வொரு கிராமமாக ஒவ்வொரு வீடாகச் சென்று அவர்களுக்கு நம்முடைய கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி கழக வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய நிர்வாகிகள் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

கழகத்தில் மட்டுமே தொண்டனும் உயர் பதவிக்கு வரமுடியும். திமுக என்றுமே குடும்ப கட்சி. அவர்கள் குடும்பத்தினர்கள் மட்டுமே உயர் பதவிகளில் இருப்பார்கள். உறுப்பினர்கள் அனைவரையும் அவர்களுக்குக் கீழே அடிமைகளாக வைத்துக் கொள்வார்கள். நம் கழகத்தில் இயற்கை என்ற எளிய தொண்டனும் உயர் பதவிக்கு வரமுடியும். அதற்கு நம்முடைய முதலமைச்சர் எடுத்துக்காட்டாக இருக்கிறார்.

இவ்வாறு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் பேசினார்.