தமிழகம்

மீண்டும் கழக ஆட்சி அமைய உறுதியேற்போம் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறைகூவல்

சென்னை,

மீண்டும் கழக ஆட்சி அமைய உறுதியேற்போம் என்று கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறைகூவல் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பலர் வரலாற்றில் இடம் பெறுகிறார்கள். ஒரு சிலர் தான் வரலாறாகவே வாழ்கிறார்கள். அந்த ஒரு சிலரில் ஒருவரான மறைந்த மாமனிதர், வாரி வழங்கி வாழ்நாளெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மகிழும் வண்ணம் ஆட்சி நடத்தியவர், சாமானியனின் கருத்திற்கு மதிப்பளித்தவர், சாமானிய மக்களுக்காக சட்டங்களை இயற்றியவர், திட்டங்களை தீட்டியவர், அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்ற கழகத்தின் நிறுவனர், மனித புனிதர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், ‘பாரத ரத்னா’, டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில் அவருக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியில், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வகுத்து கொடுத்த பாதையில் பயணித்து மீண்டும் கழக ஆட்சியை தமிழ்நாட்டில் விரைவில் ஏற்படுத்துவோம் என இந்த நன்னாளில் உறுதியேற்போம்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.