மதுரை

மதுரை திருப்பரங்குன்றத்தில் 5000 பேருக்கு அன்னதானம் -மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா வழங்கினார்

மதுரை

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளையொட்டி மதுரை திருப்பரங்குன்றத்தில் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.

கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105 வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் அவரது திருவுருவசிலைக்கும், திருவுருவ படத்திற்கும் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன்படி மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் மேலூர்,

கொட்டாம்பட்டி, ஒத்தக்கடை, நிலையூர், கருப்பாயூரணி, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. திருப்பரங்குன்றத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், மாவட்ட கழக அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் ஓம்.கே.சந்திரன், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் மேலூர் பி.எஸ்.துரைப்பாண்டி,

ஒன்றிய கழக செயலாளர்கள், பொன்.ராஜேந்திரன், கே.பொன்னுசாமி, குலோத்துங்கன், கார்சேரி கணேசன், வாசு என்ற பெரியண்ணன், பகுதி கழக செயலாளர்கள் வண்டியூர் செந்தில்குமார், பன்னீர்செல்வம், அவனியாபுரம் முருகேசன், கே.பி.சரவணன், பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.கே.பாலகிருஷ்ணன், மரக்கடை முருகேசன், மாவட்ட அணி நிர்வாகிகள் மோகன்தாஸ்,

வக்கீல் சேது, இலக்கிய அணி கா.அரசு, நாகமலை புதுக்கோட்டை ஜெயக்குமார், உசிலைமுத்துகிருஷ்ணன், கருத்த கண்ணன், ஜெயராமச்சந்திரன், ஒன்றிய கழக துணைச் செயலாளர் கார்த்திகேயன் பகுதி கழக துணைச் செயலாளர் செல்வகுமார் மற்றும் ஒத்தகடை ராஜேந்திரன் சேனாபதி, தேன்சுகுமார், மகாராஜன், எம்.ஆர்.கே.குமார், பொன்முருகன் நாகரத்தினம், பாலா, வெள்ளரிப்பட்டிபிரபு, வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.