அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முன்னிலையில் இளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு ஆரணியில் மேலும் 700 பேர் சேர்ப்பு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் 700பேர் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முன்னிலையில் இணைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த எஸ்வி.நகரம் கிராமத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முன்னிலையில் எஸ்.வி.நகரம், சுபான்ராவ்பேட்டை, உள்ளிட்ட பகுதியைசேர்ந்த 700பேர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். விழாவிற்கு ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

ஆரணி முழுவதும் ஏராளமானோர் பாசறையில் உறுப்பினர்களாக சேர்ந்து வருகின்றனர் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் ஆர்வமாக சேருகின்றனர். புதிதாக கட்சியில் சேர்ந்த நீங்கள் கழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறவேண்டும் குறிப்பாக ஆரணி தொகுதியில் கழக அரசு பல்வேறு சாதனைகள் செய்துள்ளதை எடுத்து கூறவேண்டும் கடந்த நாடாளு மன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கூறி பொதுமக்களை ஏமாற்றி எதிர்க்கட்சியினர் வெற்றி பெற்றனர். அவர்கள் இதுவரை ஆரணி மக்களுக்கு நன்றிகூற வரவில்லை, வெற்றி பெற்றவர் ஆரணிக்காக என்ன செய்தார்?

மேலும் திமுகவினர் கழக அரசு செய்யும் நல்ல திட்டங்களை தவறாக மக்களை சென்றடைய செய்கின்றனர். அதை முறியடிக்கும் வகையில் பாசறையில் உள்ளவர்கள் செயல்படவேண்டும், குறிப்பாக கழக ஆட்சியில் ஆரணிக்கு கோட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வரப்பட்டது. ஆரணி கல்வி மாவட்டமாக்கப்பட்டது, வட்டார போக்குவரத்து அலுவலகம் கொண்டுவரப்பட்டது, சூரியகுளம் ரூ.6.5 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளது,

ஆரணி மக்களின் நீண்ட நாள் கனவான காவேரி தண்ணீர் நவம்பர் மாத இறுதிக்குள் வரவுள்ளது, ஆரணி முழுவதும் சுமார் 50 கோடி ரூபாய் மதீப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சென்டர் மீடியா அமைத்து அதில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அழகாக காட்சி தருகிறது, மேலும் ஆரணி எல்லை பகுதியில் 6 இடங்களில் ஜங்ஷன் பாய்ன்ட் அமைக்கப்பட்டுள்ளது.

சங்கீதவாடி, மாமண்டூர் நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது, கண்ணமங்கலத்தில் 30 லட்சம் ரூபாயில் பேருந்து நிழற்கூடம் அமைத்தது, ஆரணி மில்லர்ஸ் ரோடில் உள்ள மார்க்கட் கமிட்டியில் விவசாயிகளின் நலனுக்காக 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல்குடோன் அமைத்தது, இவ்வாறு எண்ணற்ற பணிகள் ஆரணி தொகுதியில் செய்துள்ளதை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரியுங்கள். தமிழக முதல்வர் எடப்பாடியரை மீண்டும் முதல்வராக்கி அவரது கரத்தை பலப்படுத்துவோம்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், ப.திருமால், நகர செயலாளர் அசோக்குமார், மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவசான், எஸ்வி.நகரம் முன்னாள் தலைவர் என்.வாசு, கூட்டுறவு சங்கத்தலைவர் பாலு முதலியார், ஒன்றியக்குழு உறுப்பினர் கவிதாபாபு, முன்னாள் கவுன்சிலர் புங்கம்பாடி சுரேஷ், ஆரணி நகர மாணவரணி செயலாளர் கே.குமரன், வேலப்பாடி சரவணன், பையூர் ஊராட்சி தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.