தர்மபுரி

தருமபுரியில் முன்னாள் அமைச்சர்- எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை – விடியா தி.மு.க. அரசை கண்டித்து கழக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜன. 21-

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த கெரோகோடஹள்ளியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், கோவிந்தசாமி எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திய தி.மு.க. அரசை கண்டித்து கழக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தருமபுரி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. வீடு, பாப்பிரெட்டிபட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி வீட , கழக விவசாயப் பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், மற்றும் கழக நிர்வாகிகள் வீடுகளில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. இது பற்றி தகவலறிந்ததும் கழக நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டு முன்பு திரண்டு லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்திய தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்த ஸ்டாலின் புளித்துப் போன அரிசி, பொருட்களையும் கொடுத்து வருகிறார். தருமபுரி கழகத்தின் கோட்டை என்பதை மனதில் வைத்துக்கொண்டு முன்னாள் அமைச்சர் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம் என கோஷம் எழுப்பினர்.