தற்போதைய செய்திகள்

உறுப்பினர்களை அதிகளவில் சேர்த்து ஒற்றுமையுடன் செயல்பட்டு கழகத்தை வெற்றிபெற செய்ய வேண்டும்- பி.வி.ரமணா வேண்டுகோள்

திருவள்ளூர்

உறுப்பினர்களை அதிக அளவில் சேர்த்து ஒற்றுமையுடன் செயல்பட்டு கழகத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பி.வி.ரமணா பேசினார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மற்றும் அம்மா பேரவை ஆகிய கிளைக் கழக உறுப்பினர் சேர்க்கை படிவங்களை மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா வழங்கி பேசினார்.

அப்போது அவர் வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் திருத்தணி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் கழகம் அமோக வெற்றிபெற அனைவரும் பாடுபட வேண்டும். உறுப்பினர்களை அதிக அளவில் சேர்த்து ஒற்றுமையுடன் செயல்பட்டு கழகத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.