தற்போதைய செய்திகள்

கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர்களாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும் – தூசி கே.மோகன் எம்.எல்.ஏ அறிவுறுத்தல்

திருவண்ணாமலை

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ பேசினார்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்கை நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் எம்எல்ஏ பங்கேற்று பாசறை பொறுப்பாளர்களை சேர்க்கும் படிவங்களை ஒன்றிய செயலாளர்களிடம் வழங்கினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பாசறை மாவட்ட செயலாளர் எஸ்.திருமூலன் வரவேற்றார்.

பின்னர் மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. பேசுகையில்,

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பூத்திற்கு 25பேர் பாசறையில் உறுப்பினர்களாக சேர்க்கவேண்டும் 15பேர் நிர்வாகிகளாகவும் 10பேர் உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள், குறிப்பாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும், பூத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அந்தந்த பூத்தில் வாக்காளர்களாக இருக்க வேண்டும். பாசறையில் இருப்பவர்கள் கழக செயலாளர்களின் வாரிசுகளாக இருக்ககூடாது. உறுப்பினர்கள் 18 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.

இவ்வாறு தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் எம்.திருநாவுக்கரசு, கே.ஆர்.தவமணி, எல்.புருஷோத்தமன், பொதுக்குழு உறுப்பினர் பொய்யமொழி, மாவட்ட பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் பி.ஜாகீர்உசேன், மாவட்ட துணை செயலாளர் டி.பி.துரை, அரசு வழக்கறிஞர் எழில்மாறன கூட்டுறவு சங்க தலைவர் பத்மாவதி ஜீவரத்தினம், ஒன்றிய கவுன்சிலர் மலர்பழனி, கேட்டவரம்பாளையம் ரமேஷ், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், அம்மா ஆகியோரின் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கிய பின்னர் நிகழ்ச்சியினை துவக்கினர். நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள கழகத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.