தற்போதைய செய்திகள்

விழுப்புரத்தில் ரூ.1.98 கோடி மதிப்பில் சுரங்கத்துறை அலுவலகத்திற்கு புதிய கட்டட பணி – அமைச்சர் சி.வி.சண்முகம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

விழுப்புரம்:-

விழுப்புரத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்திற்கு ரூ.1.98 கோடி மதிப்பில் கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் சரவணவேல்ராஜ், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்களான சக்கரபாணி, முத்தமிழ்செல்வன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயாபி.சிங், புவியியல் மற்றும் சுரங்கத்துறை தலைமையக இணை இயக்குநர் சுதர்சனம், விழுப்புரம் மண்டல இணை இயக்குநர் சுரேஷ், துணை இயக்குநர் லட்சுமி பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் மண்டல இணைஇயக்குநர் அதிகாரத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் கனிம நிர்வாகத்தை மேற்பார்வையிடவும், அரசு கனிம வருவாய் அதிகரிப்பு செய்ய நிர்வாக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளும் பொருட்டு ரூ.7 லட்சம் மதிப்பிலான வாகனம், மண்டல பறக்கும் படை அலுவலருடன் தொடர்பு கொண்டு கள்ளத்தனமாக கனிமம் வெட்டி எடுப்பதை தடுக்கவும், நிர்வாக பணிக்காகவும் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான வாக்கி டாக்கி ஆகியவற்றை மண்டல இணை இயக்குநருக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

இதில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடாச்சலம், ஆவின் தலைவர் பேட்டை முருகன், மாவட்ட பண்டகசாலை தலைவர் பசுபதி, நகர செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்களான சுரேஷ்பாபு, ராமதாஸ், ராஜா, முகுந்தன், அர்பன் வங்கி தலைவர் தங்கசேகர், அரசு வழக்கறிஞர் வேலவன், கழக நிர்வாகிகள் ராமதாஸ், சக்திவேல், செந்தில், குமரன், தயாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.