சிறப்பு செய்திகள்

மொழிப்போர் தியாகிகளின் தியாகம் பூமி உள்ளவரை நிலைத்து நிற்கும் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் புகழாரம்

சென்னை

இந்த பூமி உள்ளவரை மொழிப்போர் தியாகிகளின் தியாகம் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தி மொழித்திணிப்பினை எதிர்த்து ஜனநாயக முறையில் அறவழியில் போராட்டம் நடத்தி தங்கள் இன்னுயிரை துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் என்னுடைய வீரவணக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுடைய தியாகம் இந்த பூமி உள்ளவரை என்றென்றும் நிலைத்து நிற்கும்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி கே.பழனிசாமி

இதேபோல் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற பாவேந்தரின் வரிகளுக்கு ஏற்ப நம் அன்னை தமிழின் சுயமரியாதை காக்க, வீறு கொண்டு எழுந்து கடுமையாக போராடி, தங்கள் இன்னுயிரை ஈந்து, தாய் தமிழுக்கு காவல் நின்ற மொழிப்போர் தியாகிகளுக்கு எனது செம்மார்ந்த வீரவணக்கங்கள்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.