சிறப்பு செய்திகள் தமிழகம்

பெண் குழந்தைகளை பேணி பாதுகாப்போம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்

சென்னை,

ஆண்டு தோறும் இந்தியாவில் 2009-ம் ஆண்டு முதல் ஜனவரி 24-ந்தேதி அன்று தேசிய பெண் குழந்தை நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமநிலை, சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெரிதும் உதவும்.

மக்கள் மற்றும் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு மற்றும் சம உரிமை கிடைப்பதை உறுதிசெய்வது, பாலின சமநிலை மேம்படுத்துவது, பெண் குழந்தைகளுக்கு அவர்கள் உரிமை கிடைப்பதை உறுதி செய்வது, இவை தான் பெண் குழந்தை நாள் கொண்டாடப்படுவதின் நோக்கம் ஆகும்.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நாடெங்கிலும் இருக்கும் பெண் குழந்தைகளின் கல்வி, உடல்நலம், சம உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதை மையமாக கொண்டுள்ள தேசிய பெண் குழந்தைகள் நாளில், அவர்களின் குரல்கள் ஓங்கி ஒலித்து, இந்த தேசம் செவி மடுக்கட்டும், நம் பெண் குழந்தைகளை நாம் பேணி பாதுகாப்போம் என உறுதியேற்போம்.

அன்பின் வடிவமாய், தாயின் மறு உருவமாய், கடவுளின் நேரடி தரிசனமாய் விளங்கும் பெண் குழந்தைகளை பேணி பாதுகாப்போம்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி

இதேபோல் கழக அமைப்பு ெசயலாளரும், முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தேசத்தின் வளர்ச்சியிலும், சமூகத்தின் வளர்ச்சியிலும் இன்றியமையாத சக்தியாக விளங்குபவர்கள் பெண் குழந்தைகள்
சாதனையாளர்களாகவும், சமுதாயத்தின் மாபெரும் சக்தியாகவும் திகழும் பெண் குழந்தைகளை போற்றி, இந்த தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன்.

இவ்வாறு கழக அமைப்பு ெசயலாளரும், முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளா