தற்போதைய செய்திகள்

தபால் வாக்குகளில் தி.மு.க.வினர் முறைகேடு செய்ய சதித் திட்டம்

மாநில தேர்தல் ஆணையத்திடம் கழக செய்தி தொடர்பாளர் புகார்

சென்னை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தபால் வாக்குகளில் முறைகேடு செய்ய தி.மு.க.வினர் சதி செய்ய திட்டமிட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையத்திடம் கழக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் புகார் அளித்துள்ளார்.

இது குறுித்து மாநில தேர்தல் ஆணையத்திடம் கழக செய்தி தொடர்பாளரும், கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளரும், கழக சட்ட ஆலோசனை குழு உறுப்பினருமான ஆர்.எம்.பாபு முருகவேல் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு இருகு்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரசு ஊழியர்களும், சுமார் 80 ஆயிரம் காவல் பணியாளர்களும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக கழகத்தின் சார்பில் நடைபெற இருக்கிற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கக்கூடிய அரசு அலுவலர்களையும், காவல்துறை பணியாளர்களையும் இந்த தேர்தலுக்கு தேர்தல் அலுவலர்களாக பயன்படுத்தக்கூடாது என்றும், ஏற்கனவே ஊரக பகுதிகளில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றிய அரசு ஊழியர்களையும், காவல்துறை பணியாளர்களையும் தேர்தல் பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது.

காரணம் தற்போது நடைபெற்று கொண்டிருக்கக்கூடிய தி.மு.க. ஆட்சியின் மீது எதிர்ப்பையும், வெறுப்பையும் கொண்டிருக்கக்கூடிய அரசு ஊழியர்களும், காவல்துறை அலுவலர்களும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வாக்களிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள்.

இவர்கள் ேதர்தல் பணியில் ஈடுபடுகின்றபோது தபால் வாக்குகளை செலுத்தக்கூடிய வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. இதை சாதகமாக்கி கொண்டு தி.மு.க.வினர் அதிகார பலத்தை பயன்படுத்தி வாக்கு எண்ணும் நாளில் மிகப்பெரிய சட்ட விதிமீறலை செய்து அனைத்திந்திய அண்ணா திாவிட முன்னேற்ற கழகத்திற்கு சாதகமான வாக்குகளை செல்லாது என அறிவித்தும், வெற்றி எண்ணிக்கை மிக கணிசமான அளவில் இருக்கின்றபோது தபால் வாக்குகளை தங்களுக்கு சாதகமாக்கி கொள்வதற்கும் அவர்கள் முயல்வார்கள் என்ற காரணத்தினால் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணிபுரிந்த அரசு அலுவலர்களையும்,

காவல்துறை அலுவலர்களையும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த வேண்டும் என்றும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் அரசு அலுவலர்களும், காவல்துறை பணியாளர்களும் இந்த தேர்தலில் தங்களுடைய வாக்குகளை நேரடியாக செலுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் விதமாகவும், தேர்தல் ஆணையம் நடவடிகஉ்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.