தமிழகம்

தமிழக ஆசிரியர்கள் இருவருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு – தமிழக ஆசிரியர்கள் இருவருக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து

சென்னை

தேசிய அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக ஆசிரியர்கள் இருவருக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;-

வளமான மாணவ சமுதாயத்தை உருவாக்கும் மகத்தான பணியாற்றி தேசிய நல்லாசிரியர் விருது 2020க்கு தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ள சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திலீப், சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சரஸ்வதி ஆகியோருக்கு எனது உளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.